டாலும் குறிவடிவம் கண்
ஆகிக் குணம் கொடாதே - குறுணிமையை
வாரிவாரித் தடவினாலும் கண்போன்று எழுதிய ஓவியம்
கண் ஆகி நலம்
தராது, (அதுபோல),சிறியவராம் முழுமூடர் துரைத்தனமாய உலகு ஆளத்
திறம்பெற்றாலும் - அற்பராகிய முழுமூடர்கள் அரசியலிற் கலந்து நாட்டைக்
காக்கும் வகையடைந்தாலும், அறிவுடையார் தங்களைப்போல் சற்குணமும்
உடையோர்கள் ஆகமாட்டார் - அறிவுடையவரைப் போல நற்பண்பும்
உடையவர்களாக மாட்டார்கள்.
(வி-ரை.)
‘பொய்படும்
ஒன்றோ புனைபூணும் கையறியாப், பேதை
வினைமேற் கொளின்' என்றார் வள்ளுவரும்.
60.
பிச்சைச் சோற்றினுக்குப் பேச்சில்லை
கற்றவர்க்குக் கோபமில்லை! கடந்தவர்க்குச்
சாதியில்லை! கருணை கூர்ந்த
நற்றவர்க்கு விருப்பமில்லை! நல்லவருக்
கொருகாலும் நரகம் இல்லை!
கொற்றவருக் கடிமையில்லை! தண்டலையார்
மலர்ப்பாதம் கும்பிட் டேத்தப்,
பெற்றவர்க்குப் பிறப்பில்லை! பிச்சைச்சோற்
றினுக்கில்லை பேச்சுத் தானே.
|
(தொ-ரை.)
கற்றவர்க்குக்
கோபம் இல்லை - படித்தவருக்குச் சினம்
இல்லை, கடந்தவர்க்குச் சாதி இல்லை - துறவிகட்குச் சாதி இல்லை, கருணை
கூர்ந்த நற்றவர்க்கு விருப்பம் இல்லை - அருள் மிகுந்த நல்ல தவத்தினர்க்குப்
பற்றில்லை, ஒருகாலும் நல்லவர்க்கு நரகம் இல்லை - எப்போதும்
நல்லவர்களுக்கு நரகமில்லை, கொற்றவருக்கு அடிமையில்லை - அரசர்கள்
(பிறர்க்கு) அடிமையாவது இல்லை, தண்டலையார் மலர்ப்பாதம் கும்பிட்டு
ஏத்தப் பெற்றவர்க்குப் பிறப்பு இல்லை - தண்டலையாரின் மலரடியை
வணங்கி
வாழ்த்தும் பேறு பெற்றவர்கட்குப் பிறவித்துன்பம்
|