தண்டலைநீள் நெறியாரே!,
நின் தன்னைப் பாடில் எண்ணம் மிக இம்மையிலும்
மறுமையிலும் வேண்டியது உண்டு - நின் அடிகளைப் பாடினால் மனநிறைவு
பெற இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டியது கிடைக்கும்; இதை ஓராமல் -
இதனைச் சிந்தியாமல், மண்ணின்மிசை நரத்துதிகள் பண்ணி அலைந்தே திரி
பாவாணர் எல்லாம் - இப் புவியில் மக்களைப் புகழ்ந்து பாடி அலைந்து
திரியும் கவிஞர்கள் யாவரும், வெண்ணெய் தமது இடத்து இருக்க நெய்
தேடிக்கொண்டு அலையும் வீணர்தாமே - தம் கையில் வெண்ணெய் இருக்கும்
போது (அதை உருக்கிக்கொள்ளாமல்) நெய் எங்கே உளதென்று தேடித்திரியும்
அறிவிலாரே யாவார்.
(வி-ரை.)
‘வெண்ணெயைக் கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு
அலைவான் ஏன்?'
என்பது
பழமொழி. மக்களைப் புகழ்தலாவது அவர்கள்
செய்யாததைச் செய்தார்களென்றும் அவர்களிடம் இல்லாத பண்பை
இருப்பதாகவும் கூறிப் பாடுதல். ‘மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே -
வில்லுக் கிவனென்றும் கொடுக்கிலாதானைப் பாரியே யென்று கூறினுங்
கொடுப்பாரிலை' என்றார் சுந்தரர். ‘இல்லாத சொன்னே னுக்கில்லை
யென்றான்'
என்றார் ஒரு புலவர்.
68.
ஏழைக்குத் தெய்வமே துணை அந்தணர்க்குத்
துணைவேதம் அரசருக்குத் துணைவயவாள் அவனி மீது மைந்தர்க்குத் துணைதாயார் தூதருக்குத்
துணைமதுர வார்த்தை அன்றோ? நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே
நண்ப ரான சுந்தரர்க்குத் துணைநாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணையென் பாரே.
|
(தொ-ரை.)
அந்தணர்க்கு
வேதம் துணை - மறையவர்க்கு மறையே
ஆதரவு - அரசருக்கு வயவாள் துணை - மன்னர்க்கு வெற்றிமிகும் வாளே
ஆதரவு, அவனிமீது
|