மைந்தர்க்குத் தாயார்
துணை - உலகிலே குழந்தைகட்கு அன்னையே ஆதரவு,
தூதருக்கு மதுர வார்தையன்றோ துணை - தூதர்களுக்கு இனியமொழி
அன்றோ ஆதரவு?, நந்தமக்குத் துணையான தண்டலைநீள் நெறியாரே
நண்பரான சுந்தரர்க்குத் துணை - நமக்குத் துணையாக இருக்கும்
தண்டலைநீள் நெறியாரே அவருக்குத் தோழரான சுந்தரர்க்குத் துணையானார்,
நாளும் ஏழையர்க்குத் தெய்வமே துணை என்பார் - எப்போதும் ஏழைகட்குத்
தெய்வமே ஆதரவு என்பார் (அறிஞர்).
(வி-ரை.)
‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை'
என்பது
பழமொழி.
69.
அஞ்சாதவர்! போரஞ்சார்
அதிவீரர்! பொருள் அஞ்சார் விதரணம்சேர் புருடர்! தோயும் நீரஞ்சார் மறைமுனிவர்!
நெருப்பஞ்சார் கற்புடைய நிறைசேர் மின்னார்! வாரஞ்சா முலையிடஞ்சேர் தண்டலையா
ரே! சொன்னேன் மதமா என்னும் காரஞ்சா திளஞ்சிங்கம் கனத்தவலி யாம்தூதன்
கால்அஞ் சானே. |
(தொ-ரை.)
வார்
அஞ்சா முலையிடம் சேர் தண்டலைவரரே - கச்சுக்
கடங்காத முலையையுடைய உமையம்மையாரை இடப்பாகத்திற் கொண்டருளிய
தண்டலையாரே!, அதிவீரர் போர் அஞ்சார் - பெரிய வீரர்கள் போர்செய்ய
அஞ்சமாட்டார்கள், விதரணம் சேர் புருடர் பொருள் அஞ்சார் - கொடைப்
பண்புடைய ஆடவர் பொருளுக்கு அஞ்சிடார், மறைமுனிவர்கள் தோயும் நீர்
அஞ்சார் - மறையுணர்ந்த முனிவர் முழுகும் நீரைக் கண்டு (முழுக) அஞ்சிடார்
கற்பு உடைய நிறைசேர் மின்னார் நெருப்பு அஞ்சார் - கற்பினை யுடைய
ஒழுக்க மிகுந்த பெண்டிர் நெருப்பைக் கண்டு அஞ்ச
|