மாட்டார், இளஞ்சிங்கம்
மதம் மா என்னும் கார் அஞ்சாது - இளைய சிங்கம்
மதமுடைய யானையாகிய மேகத்திற்கு அஞ்சிடாது, கனத்த வலிஆம் தூதன்
கால் அஞ்சான் - திண்ணிய வலிமையுடைய தூதுவன் நடைக்கு அஞ்சிடான்.
(வி-ரை.)
மறைமுனிவர் நீரின் முழுக அஞ்சாமை போலக்
கற்புடைய
மாதர் நெருப்பில் முழுக அஞ்சார் என உவமைப்படுத்தல் சிறப்புடையது.
70.
ஒழியாதவை உபசாரம் செய்பவரை
விலக்கிடினும் அவர்செய்கை ஒழிந்து போகா தபசாரம் செய்வாரை அடித்தாலும்
வைதாலும் அதுநில் லாது! சுபசாரத் தண்டலையார் வளநாட்டில் திருடருக்குத்
தொழில்நில் லாது! விபசாரம் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும் விட்டி டாரே.
|
(தொ-ரை.)
சுபசாரம்
தண்டலையார் வளநாட்டில் - நலம் நிறைந்த
தண்டலையாரின் வளம் நிறைந்த நாட்டினில் உபசாரம் செய்பவரை
விலக்கிடினும் அவர் செய்கை ஒழிந்துபோகாது - நலம் புரிவாரைத் தடுத்தாலும்
அவர் செயல் நீங்கிவிடாது, அபசாரம் செய்வோரை அடித்தாலும் வைதாலும்
அது நில்லாது - தீங்கு புரிவோரை ஒறுத்தாலும் பழித்தாலும் அச் செயல்
ஒழியாது, திருடருக்குத் தொழில் நில்லாது - திருடரை (என்ன செய்தாலும்)
திருட்டுத் தொழில் விடாது, விபசாரம் செய்வாரை மேனியெல்லாம் சுட்டாலும்
விட்டிடார் - விபசாரத் தொழிலில் ஈடுபட்டவரை உடம்பெல்லாஞ் சூடு
போட்டாலும் விடமாட்டார்.
|