பணந்தானே
பேசுவிக்கும்! தண்டலைநீள்
நெறியாரே! பார்மீ
திற்றான் பணந்தானே பந்தியிலே! குலந்தானே குப்பையிலே படுக்குந் தானே. |
(தொ-ரை.)
தண்டலைநீள் நெறியாரே - தண்டலைநீள் நெறியாரே!,
பணந்தானே அறிவு ஆகும் - பணமே அறிவாக மாறும், பணந்தானே
வித்தையும் ஆம் - பணமே கல்வியைத் தரும், பரிந்து தேடும் பணந்தானே
குணம் ஆகும் - விரும்பிச் சேர்க்கும் பணமே குணமெனக் காட்சிதரும்,
பணம் இல்லாதவர் பிணம் ஆம் பான்மை சேர்வர் - பணமில்லாதோர்
பிணமென்னுந் தன்மையராவர், பணந்தானே பேசுவிக்கும் - பணமே
(பேசாதவரையும்) பேசுமாறு செய்யும், பார்மீதில் பணந்தானே பந்தியிலே
குலந்தானே குப்பையிலே படுக்கும் - உலகிலே பணம் பந்தியிலும் குலம்
குப்பையிலும் சேரும்.
(வி-ரை.)
‘பணமில்லாதவன் பிணம்' ‘பணம் பந்தியிலே குலம்
குப்பையிலே' ‘பணம் பத்தும் செய்யும்'
என்பன
பழமொழிகள்.
73.
பனங்காட்டுநரி சலசலப்புக்கு .....
புனங்காட்டும் மண்ணும்விண்ணும் அஞ்சவரும் காலனையும்
போடா என்றே இனங்காட்டும் மார்க்கண்டன் கடிந்துபதி னாறுவய தென்றும் பெற்றான்
அனங்காட்டும் தண்டலையார் அடியாரெல் லாம்ஒருவர்க் கஞ்சு வாரோ! பனங்காட்டு
நரிதானும் சலசலப்புக் கொருநாளும் பயப்ப டாதே. |
(தொ-ரை.)
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு ஒருநாளும்
பயப்படாது - பனங்காட்டு நரி எப்போதும்
|