சலசல
என்ற ஒலிக்கு அஞ்சிடாது; (அதுபோல), அனம் காட்டும் தண்டலையார்
அடியாரெல்லாம் ஒருவருக்கு அஞ்சுவாரோ - அன்னங்களைக் காண்பிக்கும்
(பொய்கைகளையுடைய) தண்டலையாரின் அடியவரெல்லாரும் ஒருவருக்கும்
அஞ்சமாட்டார்; புனம்காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்சவரும் காலனையும்
- காடுகளைக் காட்டும் மண்ணுலகும் வானுலகும் அஞ்சுமாறு வந்த எமனையும்,
இனம் காட்டும் மார்க்கண்டன் போடா என்று கடிந்து - அடியார்களின்
உறவைக் காட்டும் மார்க்கண்டன் போடா என்று விலக்கி, என்றும் பதினாறு
வயது பெற்றான் - எப்போதும் பதினாறு வயதினைச் (சிவபெருமானிடம்)
பெற்றான்.
(வி-ரை.)
‘பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது'
என்பது
பழமொழி.
74.
ஊரில் ஒருவன் தோழன் .... சீரிலகும்
தண்டலையார் வளநாட்டில் ஒருதோழன் தீமை தீர வாரமிகும் பிள்ளைதனை அரிந்துண்டான்
ஒருவேந்தன் மணந்து கொண்ட ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி வடிவுகொண்டாள்!
ஆகை யாலே ஊரிலொரு வன்தோழன்! ஆரும்அற்ற தேதாரம்! உண்மை தானே? |
(தொ-ரை.)
சீர்இலகும்
தண்டலையார் வளநாட்டில் - அழகுமிக்க
தண்டலையாரின் வளமிக்க நாட்டிலே, ஒரு தோழன் தீமைதீர
வாரம்மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான் - ஒரு நண்பனுடைய
பொல்லாங்கு நீங்க அன்பு மிகும் குழந்தையை அரிந்து உண்டான்,
ஒரு வேந்தன் மணந்துகொண்ட ஆர்வமிகும் மனைக்கிழத்தி ஆண்டிச்சி
வடிவு கொண்டாள் - ஓரரசன் மணம் புரிந்துகொண்ட அன்பு மிக்க
இல்லக்கிழத்தி ஆண்டிச்சியின் கோலங் கொண்டாள்.
|