ஆகையாலே,
ஊரில் ஒருவன் தோழன் - ஆகையால் ஊரில் ஒருவனே
நண்பனாகத் தக்கவன், (பலர் இருக்க வியலாது), ஆரும் அற்றதே தாரம் -
எவரும் ஆதரவாக இல்லாதவளே மனைவியாகத் தக்கவள்; உண்மைதானே -
இது வாய்மையானதேயாகும்.
(வி-ரை.)
‘ஊரில் ஒருவனே தோழன்; ஆரும் அற்றதே தாரம்'
என்பது
பழமொழி. இங்குக் குறித்த கதையை அறிந்தாரிடம் கேட்டு உணர்க.
75.
சுகம் படுக்கை யறியாது தானவனா
கியஞானச் செயலுடையார் மாதர்முலை தழுவி னாலும் ஆனதொழில் வகைவகையாச் செய்தாலும்
அனுபோகம் அவர்பால் உண்டோ? கானுறையுந் தண்டலையார் அடிபோற்றும் சுந்தரனார்
காமி போலாய் மேனவிலும் சுகம்படுக்கை மெத்தையறி யாதெனவே விளம்பி னாரே.
|
(தொ-ரை.)
கான
உறையும் தண்டலையார் அடிபோற்றும் சுந்தரனார்
- மணம் தங்கிய தண்டலையாரின் திருவடியை வணங்கும் சுந்தரமூர்த்தி
நாயனார் காமி போலாய் - காமுகனைப்போல் நடந்துகொண்டு, மேல்நவிலும்
படுக்கைச் சுகம் மெத்தை அறியாது எனவே விளம்பினார் - உயர்த்திக்
கூறப்படும் படுக்கை இன்பத்தைப் பஞ்சணை அறியாது (மெத்தை போலவே
தாம் இருப்பதாக) என்று கூறினார்; (ஆகையால்) தான் அவன் ஆகிய ஞானச்
செயல் உடையார் - தாமும் இறைவனும் ஒன்றெனும் உணர்வுவந்த அறிவுச்
செயல் உடையோர், மாதர்முலை தழுவினாலும் - பெண்களைக் கூடினாலும்,
ஆனதொழில் வகை வகையாச் செய்தாலும் - கலவிக்குரிய தொழில்களை
வகைவகையாகப்
|