பக்கம் எண் :

78

புரிந்தாலும், அவர்பால் அனுபோகம் உண்டோ - அவர்களிடம் அந்த இன்பப்
பற்று இராது.

      (வி-ரை.) துறவிகள் உலகத்தோடு கலந்திருந்தாலும் பற்றற்றவராகவே
இருப்பார்கள் என்பது கருத்து.

 

     76. சோறு சொன்னவண்ணம் செய்யும்

சோறென்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே
     செய்யும்! அருள் சுரந்து காக்கும்!
சோறென்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே
     செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?
சோறென்ன, எளிதேயோ? தண்டலையார்
     தம்பூசை துலங்கச் செய்யும்
சோறென்ன செய்யுமெனில், சொன்னவண்ணம்
     செயும்! பழமை தோற்றுந் தானே.

      (தொ-ரை.) சோறு  என்ன செய்யும் - உணவு  யாது செய்யும்?,
எல்லாம் படைத்திடவே செய்யும் - எப்பொருளையும் ஆக்குமாறு புரியும்,
அருள் சுரந்து காக்கும் - அருள் மிகுந்து காப்பாற்றும், சோறு என்ன செய்யும்
-, எல்லாம் அழித்திடவே செய்யும் - எப்பொருளையும் அழிக்குமாறு புரியும்,
அதன் சொரூபம் ஆக்கும் - உணவின் வடிவம் ஆக்கும், சோறு என்ன
எளிதேயோ - உணவு அவ்வளவு  அற்பமா?,  தண்டலையார் தம் பூசை
துலங்கச் செய்யும் - தண்டலையாரின் வழிபாடு விளக்கமுறப் புரியும், சோறு
என்ன செயும் எனில் -, சொன்னவண்ணம் செயும் - நாம்  கூறியவாறு
முடித்துத்தரும், பழமை தோற்றும் - பழமையை உண்டாக்கும்.

      (வி-ரை.) தோற்றுந்தானே : தான், ஏ : அசைகள். ‘சோற்றுக்கில்லாச்
சுப்பன் சொன்னவெல்லாங் கேட்பான்'
என்பது பழமொழி. ‘உணவின்
பிண்டம்' ஆகையால், அதன் சொரூபம் ஆக்கும் என்றார். தாம் அளிக்கும்
உணவுக்காகத் தம்மைப் பழைமையான உறவினர் என்று கூறி வருவோரை
நோக்கிப் ‘பழமை தோற்றும்' என்றார்.