சின்னவரும் பெரியவர்போ லேநடந்தால் உள்ளதுபோம்! சிறிய
காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்னடையும் கெட்டவகை ஆகும் தானே. |
(தொ-ரை.)
பன்னகவேணிப்
பரமர் தண்டலையார் நாட்டில்உள
பலரும் கேளீர் - அரவணிந்த சடைப் பெருமானார் தண்டலை - யிறைவரின்
நாட்டில் வாழும் யாவரும் கேண்மின்!, தன் அறிவு தன் நினைவு
தன்
மகிமைக்கு ஏற்ற நடை தகுமே அல்லால் - தன் அறிவுக்கும்
தன்
சிந்தனைக்கும் தன் பெருமைக்கும் தக்க ஒழுக்கம் ஏற்குமே
அன்றி,
சின்னவரும் பெரியவர் போலே நடந்தால் உள்ளது போம் - எளியவரும்
ஆற்றலுடையார் போல நடந்தால் உள்ளதும் போய்விடும், (அது மேலும்),
சிறிய காகம் அன்னநடை நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டவகை ஆகும்
- இழிந்த காகம் உயர்ந்த அன்னத்தைப்போல நடக்கத் தொடங்கித்
தன்
நடையையும் இழந்தவாறு முடியும்.
(வி-ரை.)
‘விரலுக்குத் தக்க வீக்கம்'
எனவும்
‘அன்னநடை
நடக்கப்போய்த் தன்நடையும் கெட்டது' எனவும்
பழமொழிகள்
வழங்குகின்றன.
79.
மகாதேவர் ஆடுமிடத்திலே பேய்களும் ஆடும்
பேரான கவிராச ருடன்சிறிய கவிகளும்ஒர் ப்ரபந்தம்
செய்வார்! வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது சொல்வார்!
பாராளும் தண்டலைநீள் நெறியாரே! இருவரையும் பகுத்துக் காணில், ஆராயும் மகாதேவர்
ஆடிடத்துப் பேய்களும் நின் றாடுமாறே. |
|