பக்கம் எண் :

81

      (தொ-ரை.) பார்ஆளும் தண்டலைநீள் நெறியாரே - உலகைக்
காக்கும் தண்டலைநீள் நெறியாரே!, பேரான கவிராசருடன் சிறிய கவிகளும்
ஓர் பிரபந்தம் செய்வார் - புகழ்பெற்ற கவியரசருடன் சிறு கவிஞரும் ஒரு
நூல் எழுதுவர்; வீராதி வீரருடன் கோழைகளும் வாள்பிடித்து விருது
சொல்வார் - பெருவீரர்களுடன் வீரமற்றவர்களும் வாளேந்தி வெற்றி
யிசைப்பர்; இருவரையும் பகுத்துக் காணில் - இருவரையும் ஒப்பிட்டுப்
பார்த்தால், ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப் பேய்களும் நின்று ஆடும்
ஆறே - (பெரியோர்) ஆராய்ச்சி செய்யும் சிவபெருமான் ஆடும் இடத்திலே
பேய்களும் நின்று ஆடுவது போலாம்.


      (வி-ரை.)  எல்லோரும்  பெருவீரராகவும்  எல்லோரும்
பெருங்கவிஞராகவும்  இருத்தல்  இயலாது.  மேலும்  பெருவீரர்
இருப்பதனாலேயே மற்றவரும் போர்செய்யப் போகாமல் இருக்க முடியாது.
பெரும் புலவரைக் கண்டு சிறுபுலவர் கவிசெய்யாமல் இருத்தலும் இயலாது.
இருதிறத்தாரும் கலந்திருப்பதே உலகியல்.

 

     80. பொல்லாத கள்ளர்

செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்
     நெறியாரே! திருடிக் கொண்டே
எழுங்கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத
     கள்ளர்இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர் தம்முடன்கும் பிடுங்கள்ளர்
     திருநீறு குழைக்குங் கள்ளர்
அழுங்கள்ளர் தொழுங்கள்ளர் ஆசாரக்
     கள்ளர்இவர் ஐவர் தாமே.

      (தொ-ரை.) செழுங்கள்ளி நிறை சோலைத் தண்டலை நிள்நெறியாரே
- வளம் பொருந்திய கள்ளிகள் நிறைந்த சோலைகளையுடைய தண்டலைநீள்
நெறியாரே!, திருடிக்கொண்டு எழும் கள்ளர் நல்ல கள்ளர் - திருடிக்கொண்டு
செல்லும் கள்ளரெல்லாரும் நல்ல கள்ளர்களே; இனி பொல்லாத கள்ளர்
யாரோ என்றால் - எனின், தீய கள்ளர் யாரென