பக்கம் எண் :

82

வினவினால், கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடுங் கள்ளர் - செல்வமுடைய
கள்ளருடன் கும்பிடும் கள்ளரும், திருநீறு குழைக்கும் கள்ளர் - திருநீறு
குழைத்திடுங் கள்ளரும், அழும் கள்ளர் - அழுகின்ற கள்ளரும், தொழும்
கள்ளர் - தொழுகின்ற கள்ளரும் (என), ஆசாரக் கள்ளர் - ஒழுக்கத்திலே
மறைந்து பிறரை ஏமாற்றுங் கள்ளராகிய, இவர் ஐவர் தாமே - இந்த ஐவரும்
ஆவர்.

      (வி-ரை.) ஆசாரக்  கள்ளர்  ஒழுக்கம்  உடையார்போல  நடித்து
மக்களை நம்பச்செய்து ஏமாற்றுவதால் இவர்களைக்  கண்டு  பிடித்தல் அரிது.
இவர்களால் ஒழுக்கமுடையோரும் மக்களால் நம்பப்படார். ஆகையால்
வெளிப்படையாகத் திருடரெனப் பெயர்  பெற்றோர்  நல்லவராகவும் இவர்
தீயராகவும்  கொள்ளப்பட்டனர். கொழுங்கள்ளர் : செல்வம்  இருந்தும்
இல்லார்போல நடித்திடுவோர். மற்று, நல்ல தோற்றமுடையராகக் காணப்பட்டு
மக்களை ஏமாற்றுவோர் எனினும் ஆம்.

 

     81. மனத்திலே பகையாகி ...

தனத்திலே மிகுத்தசெழுந் தண்டலையார்
     பொன்னிவளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும்பெரியோர் வாக்குமனம்
     ஒன்றாகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகுஞ்சிறியோர் காரியமோ
     சொல்வதொன்று! செய்வதொன்று!
மனத்திலே பகையாகி உதட்டிலே
     உறவாகி மடிவர் தாமே.

      (தொ-ரை.) தனத்திலே மிகுந்த செழுந்தண்டலையார் பொன்னி வளம்
தழைத்த நாட்டில் - செல்வத்திலே சிறப்புற்ற வளமிக்க தண்டலையாருடைய
காவிரியின் வளங்கொழிக்கும் நாட்டிலே, இனத்திலே மிகும் பெரியோர் மனம்
வாக்கு ஒன்று ஆகி எல்லாம் செய்வார் - நட்பிலே சிறந்த பெரியோர்கள்
நினைவும் சொல்லும் ஒன்றுபட்டு யாவற்றையும் இயற்றுவார்கள்; சினத்திலே
மிகும் சிறி