பக்கம் எண் :

83

யோர் காரியமோ சொல்வது ஒன்று செய்வது ஒன்று - செற்றத்திலே சிறந்த
கீழ்மக்களின் வேலையெனிலோ கூறுவது ஒன்று இயற்றுவது மற்றொன்று,
மனத்திலே பகை ஆகி உதட்டிலே உறவு ஆகி மடிவர் - உள்ளத்திலே பகை
வைத்துக்கொண்டு பேச்சிலே உறவு காண்பித்துக் காலத்தைக் கழிப்பர்.

     (வி-ரை.) ‘உள்ளே பகை, உதட்டில் உறவு,' என்பது பழமொழி.

 

     82. ‘ஊரோட உடனோட '

தேரோடும் மணிவீதித் தண்டலையார்
     வளங்காணும் தேசம் எல்லாம்
போரோடும் விறல்படைத்து வீராதி
     வீரரென்னும் புகழே பெற்றார்
நேரோடும் உலகத்தோ டொன்றுபட்டு
     நடப்பதுவே நீதி ஆகும்!
ஊரோட உடனோட நாடோட
     நடுவோடல் உணர்வு தானே.

      (தொ-ரை.) தேர் ஓடும் மணி வீதி தண்டலையார் வளம் காணும்
தேசம்  எல்லாம் - தேர்  ஓடுகின்ற அழகிய  தெருக்களையுடைய
தண்டலையாரின் வளம் மிக்க நாடுகள் யாவும், போர் ஓடும் விறல் படைத்து
வீராதி வீரரெனும் புகழே பெற்றார் - போர்க்களத்திலே வெற்றியடைந்து
மேம்பட்ட வீரர்களுக்குள் சிறந்த வீரர் எனும் புகழை அடைந்தவரும்,
நேரோடும் உலகத்தோடு ஒன்றுபட்டு நடப்பதுவே நீதி ஆகும் - ஒழுங்காகச்
செல்கின்ற உலகத்திலே தாமும் ஒன்றாகி வாழ்வை நடத்துவதே அறம் ஆகும்,
ஊர் ஓட உடன் ஓட நாடோட நடுவோடல் உணர்வுதானே - எல்லோரும்
செல்லும் நெறியிலே தாமும் நடத்தல் அறிவுடைமையன்றோ?

      (வி-ரை.) ‘ஊரோட உடன் ஓடு!; நாடு ஓட நடுவோடு!' என்பது
பழமொழி.
‘ஊருடன் கூடிவாழ்' என்றார் ஒளவையார்.