83.
‘வழுவழுத்த வுறவதனின் ...' இழைபொறுத்த
முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
இருப்பதுவே தக்க தாகும்! குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும் கல்லாமை
குணமே! நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம்பற் றியபகையே வண்மை யாமே.
|
(தொ-ரை.)
இழை
பொறுத்த முலை பாகர் தண்டலையார்
வளநாட்டில் - அணிதாங்கிய முலைகளையுடைய உமையம்மையாரை
இடப்பாகத்திற் கொண்ட தண்டலையாரின் வளம்பொருந்திய
நாட்டிலே,
எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய் இருப்பதுவே தக்கது
ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக் காட்டினும்
பாடாமல் இருப்பதே நலந்தரும்; குழை குழைத்த கல்வியினும் கேள்வியினும்
கல்லாமை குணமே - தெளிவற்ற கல்வி கேள்விகளைவிடக் கல்லாமையே
நன்றாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை
ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற நட்பைக் காட்டினும் நீங்காத செற்றம்
பொருந்திய பகையே வளமுடையதாகும்.
(வி-ரை.)
தெளிவில்லாத
எச் செயலும் நலந்தராது. வயிரம் - நீங்காத
சினம்.
84.
நெருப்பினைச் சிறிதென்று முன்றானையில் ... அருப்பயிலும்
தண்டலைவாழ் சிவனடியார் எக்குலத்தார் ஆனால் என்ன? உருப்பயிலும் திருநீறும்
சாதனமும் கண்டவுடன் உகந்து போற்றி,
|
|