(தொ-ரை.)
வரம்
காணும் தண்டலைநீள் நெறியாரே - நலம்
பொருந்திய தண்டலைநீள் நெறியாரே!, பெண்ணிடத்தில் மயக்கத்தாலே
இரங்காத பேரும் உண்டோ - பெண்ணிடம் உண்டாகும் தடுமாற்றத்தினால்
(பெண்ணைக் கண்டவுடன்) இரக்கம் காட்டாதவரும் உளரோ?, பெண்
என்றவுடன் பேயும் இரங்கும் - (எனினும்), உரம் காணும் பெண் ஆசை
கொடிது ஆகும் - விரைவு படுத்தும் பெண் காமம் கொடியது ஆகும்;
பெண்புத்தி உதவாது ஆகும் - பெண்ணின் அறிவுரை பயன் தராது ஆகும்;
(ஆகையால்), திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும் - உறுதிபோற்
காணப்படும் பெண்மொழி கொடியதாகும், பெண்சென்மம் சென்மம் ஆமோ
- பெண்பிறப்பு இன்பந்தரும் பிறப்பு என்று சொல்ல முடியுமோ?
(வி-ரை.)
வரம்
- நன்மை. பெண் ஆசையினால் மேல் விளைவு
கருதாது தவறான வழியிலே செல்வதுபற்றிக் கொடியது என்றார்.
அங்ஙனமன்றிக் ‘காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவுபட்ட' இன்பத்தைக்
குறை கூறியதாகாது. அவ்வாறே பெண்புத்தியுதவாதென்றும் பெண்வார்த்தை
தீதென்றுங் கூறியவற்றையுங் கொள்க. இன்றேல், விறல் மந்திரி மதி
யுடைய
பெண்ணை இழிவு படுத்தியதாகும். உலகிலே பெண் பிறப்பே பல்வகைத்
துன்பத்தினும் ஈடுபடுவதால் ‘பெண் சென்மம் சென்மம் ஆமோ' என்றார்.
‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்' என்பது
பழமொழி.
86.
கையிலே புண் இருக்கக் கண்ணாடி பார்ப்பதென்ன?
மையிலே தோய்ந்தவிழி வஞ்சியரைச் சேர்ந்தவர்க்கு மறுமை
யில்லை! மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும் கேடாகி விழலர் ஆவார்!
செய்யிலே வளந்தழைத்த தண்டலையார் வளநாட்டில் தெளிந்த தன்றோ? கையிலே புண்இருக்கக்
கண்ணாடி பார்ப்பதென்ன கருமம் தானே? |
|