பக்கம் எண் :

88

களவு கள்ளே காமம் சாலவரும் குருநிந்தை செய்பவர் பால் - கொலையும்
களவும் கட்குடியும் காமமும் நிறைய வரும் குருநிந்தையும் செய்பவரிடம்,
மேவி  அறந்தனைச்  செய்தற்கும் - சென்று  அறங் கூறுவதற்கும், சீலம்
உடையோர்  நினையார் - ஒழுக்கம் உள்ளோர் எண்ணமாட்டார்; பனை
அடியிலேயிருந்து - பனையின்  நிழலிலே  தங்கி,  தெளிந்த ஆவின்
பாலினையே குடித்தாலும் - தெளிவான பசுவின் பாலையே குடித்தாலும், கள்
என்பார் தள் என்பார் பள் என்பார் - (அப் பாலைக்) கள் என்றே கூறிக்,
‘குடித்தவனை நீக்குக! அவன் பள்ளன் என்றும் கூறி விடுவர்.

      (வி-ரை.) ஒழுக்கம் கெட்டவருக்கு அறங்கூறச் சென்று, அவர்களுடன்
பழகினால் சென்றவர்க்கும் ஒழுக்கங் கெட்டவர் என்ற பேரே வரும் என்பது
கருத்து.
‘பனையடியிலிருந்து பாலைக் குடித்தாலும் கள் குடித்தானென்பர்'
என்பது பழமொழி.
‘காணவே பனையின் கீழாக் குடிப்பினும் கள்ளே
யென்பார்
'
என்பது விவேக சிந்தாமணி.

 

     88. பொல்லாச் சூது

கைக்கெட்டா தொருபொருளும்! கண்டவர்க்கு
     நகை யாகும்! கனமே! யில்லை!
இக்கட்டாம் வருவதெல்லாம்! லாபமுண்டோ?
     கவறு கையில் எடுக்கலாமோ?
திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்
     வளநாட்டிற் சீச்சீ யென்னச்
சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்
     சூது பொல்லாச் சூது தானே.

      (தொ-ரை.) திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார் வளநாட்டில்
- எட்டுத் திக்கினும் பரவிய புகழையுடைய தண்டலையாரின் வளம்பொருந்திய
நாட்டிலே, சீச்சீ என்னச் சொக்கட்டான் எடுத்தவர்க்கு - சீச்சீ என இகழும்படி
சொக்கட்டானை எடுத்தவர்க்கு, ஒரு பொருளும் கைக்கு எட்டாது - எப்
பொருளும் கிடையாது; கண்டவர்க்கு நகை