ஆகும் - பார்த்தவர்
இகழ்வர்; கனமே இல்லை - மதிப்பே இராது; வருவது
எல்லாம் இக்கட்டாம் - வருவது முற்றும் இடுக்கண் ஆகும்; லாபம் உண்டோ
- ஊதியம் இல்லை; (ஆகையால்), கவறு கையில் எடுக்கலாமோ -
பாய்ச்சிகையைக் கையாலுந் தொடலாமோ?, சொக்கட்டான் சூது பொல்லாச்
சூதுதானே - சொக்கட்டான் எனும் சூதாட்டம் தீய சூதாட்டம் ஆகும்.
(வி-ரை.)
"வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மின்விழுங்கி யற்று"
என்று வள்ளுவர் கூறினர். கவறு :
சூதாடு கருவி.
89.
புற்றடிமண் முதலியவற்றின் பயன் தனமேவும்
புற்றடிமண் குருந்தடிமண் பிரமகுண்டம் தன்னில் ஏய்மண் மனமேவும் மணியுடனே மந்திரமும்
தந்திரமும் மருந்தும் ஆகி, இனமேவும் தண்டலையார் தொண்டருக்கு வந்தபிணி
யெல்லாம் தீர்க்கும்! அனுபோகம் தொலைந்தவுடன் சித்தியாம் வேறும்உள அவிழ்தந்
தானே. |
(தொ-ரை.)
தனம்
மேவும் புற்றடிமண் குருந்தடி மண் பிரமகுண்டம்
தன்னில் ஏய் மண் - செல்வம் மிக்க புற்று மண்ணும் குருந்த மரத்தடி
மண்ணும் பிரமகுண்டத்தில் உள்ள மண்ணும், மனம் மேவும் மணியுடனே
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி - உளம் விரும்பும் மணியும் மந்திரமும்
ஆராய்ச்சியும் மருந்தும் என ஆகி, இனம் மேவும் தண்டலையார்
தொண்டருக்கு வந்த பிணி எல்லாம் தீர்க்கும் - உறவாகிய தண்டலையாரின்
அடியவர்க்கு வந்த நோயை யெல்லாம் போக்கும்; வேறும் உள அவிழ்தம்
அனுபோகம் தொலைந்தவுடன் சித்திஆம் - மற்றும் உள்ள மருந்துகள்
(முன்வினைப்) பயன் கழிந்த பிறகே நலந்தரும்.
|