பக்கம் எண் :

90

      (வி-ரை.) இறைவன் இருப்பிடத்தில் உள்ள மண்ணும் அடியவர்
நோயை எல்லா வகையினும் எப்போதும் போக்கும். வேறு மணியும் மருந்தும்
மந்திரமும் பழவினைப் பயன் நன்றாக இருந்தால் மட்டும் நோய்களை நீக்கும்;
தீமையாக இருந்தால் நோய்களை நீக்கமாட்டா.

 

     90. அரைக்காசுக்குப் போன அபிமானம் ...

கானமரும் கவரியொரு மயிர்படினும்
     இறக்கும்! அது கழுதைக் குண்டோ?
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!
     சுயோதனனை மறந்தார் உண்டோ?
ஆனகஞ்சேர் ஒலிமுழங்கும் தண்டலையா
     ரே! சொன்னேன்! அரைக்கா சுக்குப்
போனஅபி மானமினி ஆயிரம்பொன்
     கொடுத்தாலும் பொருந்தி டாதே.

      (தொ-ரை.) ஆனகம் சேர் ஒலி முழுங்கும் தண்டலையாரே - முரசு
கலந்த ஓசை முழங்கும் தண்டலையாரே!, கான் அமரும் கவரி ஒரு மயிர்
படினும் இறக்கும் - காட்டில் இருக்கும் கவரிமான் ஒரு மயிரை இழந்தாலும்
இறந்து விடும்; அது  கழுதைக்கு  உண்டோ - அந்தப்  பண்பு  கழுதைக்கு
இருக்கிறதோ?, மானமுடன்  வாழ்பவனே  மாபுருடன் - மானத்தோடு
வாழ்கின்றவனே ஆடவரிற் சிறந்தவன்; சுயோதனனை மறந்தார் உண்டோ -
துரியோதன்னை மறந்தார் யார்?, அரைக்காசுக்குப் போன அபிமானம் இனி
ஆயிரம் பொன் கொடுத்தாலும் பொருந்திடாதே. -

      (வி-ரை.) ஆனகம் - முரசு. கவரி - கவரிமான். சுயோதனன் - சிறந்த
போர்வீரன் (காரணப் பெயர்). யோதனன் - போர்வீரன். இவன் தன் சிற்றப்பன்
மக்களான  பாண்டவருக்  கடங்கி  வாழ  விரும்பாமல்  இறுதிவரையில்
அவர்களைப் பகைத்துப் போர் செய்து உயிர் துறந்தான். மற்றும் பதினெட்டாம்
நாட்போரிலே தனித்து நின்ற சுயோதனனைத் தருமன் பார்த்து மனமிரங்கித்
தம்முடன் கூடி அவனையே உலகை ஆளும்படியும் ஒத்துப் போகும்