பக்கம் எண் :

91

படியும் கூறினான். அதற்கு அவன் தன்னுடன் பிறந்தார் உறவினர் நண்பரை
யெல்லாம் தனக்காக மடியவிட்டு நாடு என்றவுடன் உயிருக்கும் செல்வத்திற்கும்
ஆசைப்பட்டு ஒத்துப்போக முடியாதென்று கூறினான். ஆகவே, அவன்
மானமுடையவனாகக் கருதப்பட்டான்.
‘அரைக்காசுக்குப் போன மானம்
ஆயிரம்
பொன் கொடுத்தாலும் வராது'
என்பது பழமொழி.

 

91. மலைமீதில் இருப்பவரைப் பன்றி பாயாது

நிலைசேரும் அதிகவித ரணசுமுக
     துரைகளுடன் நேசம் ஆகிப்
பலநாளு மேஅவரை அடுத்தவர்க்குப்
     பலனுண்டாம்! பயமும் இல்லை!
கலைசேரும் திங்கள்அணி தண்டலையா
     ரே! சொன்னேன்! கண்ணிற் காண
மலைமீதில் இருப்பவரை வந்துபன்றி
     பாய்வதெந்த வண்ணந் தானே?

      (தொ-ரை.) கலைசேரும் திங்கள் அணி தண்டலையாரே - (ஒற்றைக்)
கலையுடன் பொருந்திய (பிறைத்) திங்களைச் சடையில் அணிந்த
தண்டலையாரே! கண்ணில் காண மலை மீதில் இருப்பவரைப் பன்றி வந்து
பாய்வது எந்த வண்ணம் - கண்ணிற் காணுமாறு மலைமேல் இருப்பவரைத்
தரையிலிருக்கும் பன்றி வந்து எவ்வாறு பாயும்?, (ஆகையால்), நிலைசேரும்
அதிக விதரண சுமுக துரைகளுடன் நேசம் ஆகி - நிலைபெற்ற சிறந்த
அறிவும் இன்முகமும் உடைய தலைவர்களுடன் நட்புக்கொண்டு, அவரைப்
பலநாளும் அடுத்தவர்க்குப் பலன் உண்டாம் - அவர்களைப் பெரும்பாலான
நாள்களில் அடைந்திருந்தவர்க்கு நன்மை உண்டு; பயமும் இல்லை -
அச்சமும் உண்டாகாது.

      (வி-ரை.) விதரணம் (வட) - அறிவு. சுமுகம் (வட) - இன்முகம். ‘ஆம்
பிள்ளாய்' எனத் தொடங்கும் (44) செய்யுளிற் பெரியோரை அடுத்தவர் உயர்வு
பெறுவார் என்று கூறினார். இச்செய்யுளிற், ‘பெரியோரை அடுத்தவர்க்குத்
தீமையில்லை; நன்மையும் உண்டாகும்' என்கிறார்.