92.
‘நிறைகுடமோ தளும்பாது'
பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம் விளக்கேற்றிப்
புகுத வேண்டும்! கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து நடந்துதலை கீழாய் வீழ்வார்!
வறுமையினும் மறுமையினும் காணலாம் தண்டலையார் வாழும் நாட்டில் நிறைகுடமோ
தளும்பாது! குறைகுடமே கூத்தாடி நிற்ப தாமே! |
(தொ-ரை.)
தண்டலையாா்
வாழும்
நாட்டில், பொறுமையுடன்
அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் -
பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச்
சென்று காணவேண்டும்!, கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து நடந்து
தலைகீழாய் வீழ்வர் - செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து
தலைதடுமாறி அழிவார்கள்; வறுமையினும் மறுமையினும் காணலாம் -
வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம்;
(எப்போதும் ஒரு மாதிரியே யிருப்பர்), நிறைகுடமோ தளும்பாது - நீர்
நிறைந்தகுடம் எனிலோ தளும்புவதுஞ் செய்யாது; குறைகுடமே கூத்தாடி
நிற்பது ஆம் - நீர் குறைந்த குடந்தான் கூத்தாடி நிற்கும்.
(வி-ரை.)
கருவம்
என்னும் சொல் எதுகை மோனை நயங்களை
நோக்கிக், ‘கெறுவம்' ஆயிற்று.
‘இருந்த இடம் விளக்கேற்றிப் புகுத
வேண்டும்' ‘தலைகீழாய் வீழ்வார்' என்பன
மரபு மொழிகள். ‘நிறைகுடம்
தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்பது
பழமொழி.
93.
ஆலமரம் பழுத்தவுடன் ... ஞாலம்உறு
நல்லவர்க்குச் செல்வம் வந்தால் எல்லவர்க்கும்
நாவ லோர்க்கும் காலம்அறிந் தருமையுடன் பெருமையறிந் துதவிசெய்து கனமே செய்வார்; |
|