பக்கம் எண் :

93

மாலறியாத் தண்டலைநீள் நெறியாரே!
     அவரிடத்தே வருவார் யாரும்!
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பாற்
     சீட்டெவரே அனுப்பு வாரே?

      (தொ-ரை.) மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே - திருமாலும்
அறியாத தண்டலைநீள் நெறியாரே!, ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
எவரே சீட்டு அனுப்புவார் - ஆலமரம் பழுத்தாற் பறவைகள் வரவேண்டும்
என்று சீட்டனுப்புவோர் யார்? (அவ்வாறே), ஞாலம் உறு நல்லவர்க்குச்
செல்வம் வந்தால் - உலகில் உள்ள நல்லோர்களுக்குச் செல்வம் கிடைத்தால்,
நாவலோர்க்கும் எல்லவர்க்கும் - புலவர்களுக்கும் இரவலர் முதலிய
யாவருக்கும், காலம் அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து - காலமும்
அருமையும் பெருமையும் உணர்ந்து, உதவி செய்து கனமே செய்வார் -
பொருள் கொடுத்துப் பெருமைப் படுத்துவார்கள்; அவரிடத்தே யாரும்
வருவார் - அவரிடம் எல்லோரும் வருவார்கள்.

      (வி-ரை.) ‘மரம் பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி,
இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை'
-
என்பது இங்கு ஒப்பிடத்தக்கது.

 

     94. நாணம் அற்றார் நிலை

சேணிலகு மதிச்சடையார் தண்டலையார்
     வளநாட்டிற் சிறந்த பூணின்
காணவரும் நாணுடையார் கனமுடையார்
     அல்லாதார் கருமம் எல்லாம்
ஆணவலம்! பெண்ணவலம்! ஆடியகூத்
     தவலம்! என அலைந்து கேடாம்!
நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்
     வாயிலெனும் நடத்தை ஆமே.