(தொ-ரை.)
சேண் இலகும் மதிச் சடையார்
தண்டலையார்
வளநாட்டில் - வானில் உலவும் பிறைத்திங்களணிந்த சடையினரான
தண்டலையாரின் வளம் பொருந்திய நாட்டில், சிறந்த பூணின் காணவரும்
நாணுடையார் கனம் உடையார் அல்லாதார் கருமம் எல்லாம் - சிறப்பு மிக்க
அணிகலன் போலக் காணப்படும் நாணமும் பெருமையும் இல்லாதவரின்
செயல்கள் யாவும், ஆண் அவலம் பெண் அவலம் ஆடிய கூத்து அவலம்
என அலைந்து கேடு ஆம் - ‘ஆடவரும் வீணர்! பெண்டிரும் வீணர்!
அவர்கள் நடத்திய கூத்தும் வீண்!' எனுமாறு அலைவுற்றுக் கேடு ஆகும்;
(அச்செயல்), நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும் வாயில் எனும்
நடத்தை ஆம் - வெட்கம் அற்ற கூத்தாடிச்சிகட்கு நான்கு திசையினும் வழி
என்னுமாறு ஆய்விடும்.
(வி-ரை.)
நன்றாகக் கூத்தாடும் திறமையற்ற கூத்தாடும் பெண்டிர்
தம்மைப் பலரும் பழிக்கும்போது வெட்கித் திசை நோக்காமல் ஓடுவர்;
அதுபோல நாணமும் மானமும் இல்லார் கருமமும் பலரும் பழிக்கும்படி
வீணாகும் என்க. ‘ஆணவலம்! வெண்ணவலம்; ஆடிய
கூத்து அவலம்!,
‘நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்' என்பவை
பழமொழிகள் போலும்.
95.
பிடாரிதனைப் பெண்டு வைத்துக்கொண்டது
அடுத்தமனை தொறும்புகுவாள்! கணவன்உணும் முனம் உண்பாள்!
அடக்கம் இல்லாள்! கடுத்தமொழி பேசிடுவாள்! சிறுதனம்தே டுவள்! இவளைக் கலந்து
வாழ்தல் எடுத்தவிடைக் கொடியாரே! தண்டலையா ரே! எவர்க்கும் இன்பம் ஆமோ?
குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டுவைத்துக் கொண்ட தாமே. |
|