(தொ-ரை.)
எடுத்த விடைக் கொடியாரே - இடபக்கொடி
உயர்த்தவரே! தண்டலையாரே! அடுத்த மனைதொறும் புகுவாள் - அயல்
வீடுகளிலெல்லாம் நுழைவாள், கணவன் உணும் முனம் உண்பாள் - கணவன்
உண்பதற்குமுன் உண்பாள், அடக்கம் இல்லாள் - அடங்கியிராள்,
கடுத்தமொழி பேசிடுவாள்- வெறுப்பாகவே உரையாடுவாள், சிறுதனம்
தேடுவள் - (தனியே) சிறு சேமிப்புச் செய்வாள், இவளைக் கலந்து வாழ்தல்
எவர்க்கும் இன்பம் ஆமோ- இவளைக் கூடி வாழ்வது யாருக்குத் தான்
மகிழ்ச்சியா யிருக்கும்?, குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டு
வைத்துக் கொண்டது. ஆம் - குடிகெடுவதற்குப் பிடாரியை மனைவியாகக்
கொண்டதாகும் அச் செயல்.
(வி-ரை.)
சிவபிரானுக்குரியது விடைக்கொடி. பிடாரி
- காளி. இவள்
சிவனுடன் வாதாடினாள் என்று கூறுவதால், அடங்கா மனைவியை,
‘அடங்காப்பிடாரி' யெனல் மரபு.
96.
இளைத்தவன் பெண்டிர் என்றால் ..... களித்துவரும்
செல்வருக்கு வலிமையுண்டு! மிடியருக்குக் கனந்தான் உண்டோ? வளைத்தமலை யெனுஞ்சிலையார்
தண்டலைசூழ் தரும்உலக வழக்கம் பாரீர்! ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்
கண்டவரும் ஒன்றும் பேசார்! இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்
மச்சினியாய் இயம்பு வாரே. |
(தொ-ரை.)
வளைத்த மலையெனும் சிலையார் தண்டலை சூழ்தரும்
உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையாகிய வில்லேந்திய சிவபெருமான்
தண்டலையைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில்
பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ
வலிமையுடையோர் வீட்டில் உள்ள பெண்களைக்
|