கண்டு ஒளித்திடுவார்;
ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன்
பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச் சினியாய் இயம்புவார் - ஆற்றலற்றவன்
மனைவியெனிலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்;
(ஆகையால்), களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும்
செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ -
ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?
(வி-ரை.)
சிவபெருமான்
மேருமலையை (திரிபுரமெரிக்கும் போது)
வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார்.
‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி'
என்பது
பழமொழி.
97.
பிறர் வருத்தம் அறியார் நொந்தவரும்
பசித்தவரும் விருந்தினரும் விரகினரும் நோயுள் ளோரும் தந்தமது வருத்தமல்லாற்
பிறருடைய வருத்தமது சற்றும் எண்ணார்! இந்துலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன் ஈன்ற தாயின் அந்தமுலைக் குத்துவலி சவலைமக வோசிறிதும்
அறிந்தி டாதே. |
(தொ-ரை.)
இந்து
உலவும் சடையாரே - பிறைமதி விளையாடும்
சடையினரே! தண்டலையாரே!, ஈன்ற தாயின் அந்த முலைக்குத்துவலி
சவலைமகவோ சிறிதும் அறிந்திடாதே - பெற்ற அன்னையின் முலைக்குத்து
நோயைச் சவலைப்பிள்ளை கொஞ்சமும் அறியாது; (அதுபோல), நொந்தவரும்
பசித்தவரும் விருந்தினரும் விரகினரும் நோயுள்ளோரும் - வருந்தினோர்,
பசித்தோர், விருந்துண்ண வந்தோர், காமுகர், நோயினர் ஆகியோர்; தந்தமது
வருத்தம் அல்லால் பிறருடைய வருத்தமது சற்றும் எண்ணார் - தங்கள்
வருத்தத்தை அன்றி மற்றவர்களின் வருத்தத்தைச் சிறிதும் நினையார்.
|