“ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம் காயா திருந்தென்ன காய்ந்துப் பலனென்னகந்தைசுற்றிப் போயா சகமென் றிரந்தோர்க்குச் செம்பொன்பிடிபிடி ஓயாமல் ஈபவன் வேன்சீதக் காதி ஒருவனுமே” |
சீதக்காதி இறந்த பின்னர் அவன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்சென்று பாடியது : |
“பூமா திருந்தென்புவிமா திருந்தென்ன பூதலத்தில் நாம திருந்தென்னநாமிருந் தென்னநன் னாவலர்க்குக் கோமா னழகமர் மால்சீதக் காதி கொடைமிகுந்த சீமா னிறந்திட்ட போதே புலமையுஞ் செத்ததுவே” |
“தேட்டாளன் காயற் றுரைசீதக் காதி சிறந்தவச்ர நாட்டான் புகழ்க்கம்ப நாட்டிவைத்தான்புகழ் நாவலரை ஓட்டாண்டி யாக்கி யவர்கடம் வாயி லொருபிடிமண் போட்டா னவனு மொளித்தான் சமாதிக்குழிபுகுந்தே” |
“மறந்தாகிலுமரைக் காசுங் கொடாமடமாந்தர்மண்மேல் இறந்தாவ தென்ன இருந்தாவ தென்னஇறந்து விண்போய்ச் சிறந்தாளுங் காயற் றுறைசீதக்காதிதிரும்பிவந்து பிறந்தா லொழியப் புலவோர் தமக்குப்பிழைப்பில்லையே” |
இவற்றைப் பாடியவுடன் சீதக்காதியின் மோதிரம் அணிந்த கை வெளிவர, அம்மோதிரத்தைப் பரிசாகப் பெற்றார் என்றும், அதனால், ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்றும் சொல்லப்படுகின்றன. |
தமக்கு இலக்கணங்கற்பித்த திருவாரூர் வைத்தியநாத நாவலர் புதல்வர் சதாசிவ நாவலரைப் புகழ்ந்து பாடியது: |