பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 1

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பழமொழி விளக்கம்

என்னும்

தண்டலையார் சதகம்

காப்பு
 

சீர்கொண்ட கற்பகத்தின் வாதாவி நாயகனைத்
      தில்லை வாழும்
கார்கொண்ட கரிமுகனை விகடசக்ர கணபதியைக்
      கருத்துள் வைப்பாம்
பேர்கொண்ட ஞானநா யகிபாகன் தண்டலைஎம்
      பெருமான் மீதில்
ஏர்கொண்ட நவகண்டம் இசைந்தபழ மொழிவிளக்கம்
      இயம்பத் தானே.


காப்பு :- 1. வாதா- பெயர் சொல்லப்படுகின்ற கார் கொண்ட - கரிய
மதநீரைக் கொண்ட. ‘விகட சக்ர விநாயகர்’  என்னும் பெயர் காஞ்சியில்
உள்ள விநாயகருக்குச்  சிறப்பாக வழங்கும். நவகண்டம்-ஒன்பது  பாகம்.
பூமியை ஒன்பது பாகமாகக்  கூறுதல் பழைய வழக்கம். அதனை நிகண்டு
நூல்களிற் காண்க.