வேதநெறி விளம்பியசொல் ஆகமநூல் விளம்பியசொல் மிகுபு ராணம்ஏதுவினிற் காட்டியசொல் இலக்கணச்சொல் இசைந்தபொருள் எல்லாம் நாடி ஆதிமுதல் உலகுதனில் விளங்குபழ மொழிவிளக்கம் அறிந்து பாடச்சோதிபெறு மதவேழ முகத்தொருவன் அகத்தெனக்குத் துணைசெய் வானே.
அவையடக்கம்
வள்ளுவர்நூ லாதிபல நூலிலுள அரும்பொருளை வண்மை யாகஉள்ளபடி தெரிந்துணர்ந்த பெரியவர்கள் முன்நானும் ஒருவன் போலப்பள்ளமுது நீருலகிற் பரவுபழ மொழிவிளக்கம் பரிந்து கூறல்வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவதனில் ஊசிவிற்கும் வினைய தாமே.
2. ஏதுவினில் - காரணமாக.
அவையடக்கம் : இது முதல் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும்ஒவ்வொரு பழமொழி வருவது காண்க. சில பாட்டுக்களில் இடையிலும்ஒரு பழமொழி வருகின்றது. பள்ள முதுநீர் - கடலில் நிறைந்துள்ளமிக்க நீராற் சூழப்பட்ட. பரிந்து-அவாவுற்று. வெள்ளைமதியினன்-அறிவில்லாதவன்.