கூன்செய்த பிறையணியுந் தண்டலையார் கருணைசெய்து கோடி கோடி யான்செய்த வினையகற்றி நன்மைசெய்தால் உபகாரம் என்னால் உண்டோ ஊன்செய்த உயிர்வளரத் தவம்தானம் நடந்தேற உதவி யாக வான்செய்த நன்றிக்கு வையகம்என் செய்யும்அதை மறந்தி டாதே. 2
1. கரு விளக்கும்- கருவைக் காட்டுகின்ற ; கருவில்சேர்க்கின்ற. காணி- உரிமை இடம். அறிந்திடும்- விரும்பும். “விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்“ என்பது திருமுறை (4.77.3.)