பக்கம் எண் :

4பழமொழி விளக்கம் என்னும்

இட்டதற்குமேல் இல்லை
 

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும் பாதாள
     மதிற்சென் றாலும்
பட்டமென வானூடு பறந்தாலும் என்னஅதிற்
     பயனுண் டாமோ
பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரோ முன்னாள்
     பெரியோர் கையில்
இட்டபடி யேயொழிய வேறாசைப் படில்வருவ
     தில்லை தானே.                             3
 

நன்மை தீமை
 

தன்மமதைச் செயல்வேண்டும் தண்டலைநீ ணெறியாரே
     தயவு செய்வார்
வன்மவினை செயல்வேண்டா பொய்வேண்டா பிறரை     
                                      ஒன்றும்
     வருத்தல் வேண்டா     
கன்மநெறி வரல்வேண்டா வேண்டுவது பலர்க்கும்உப
     கார மாகும்
நன்மைசெயதார் நலம்பெறுவர் தீமைசெய்தார் தீமைபெற்று
     நலிவர் தாமே.                              4
 

இல்லறத்தின் சிறப்பு
 

புல்லறிவுக் கெட்டாத தண்டலையார் வளந்தழைத்த
     பொன்னி நாட்டிற்
சொல்லறமா தவம்புரியுஞ் சௌபுரியும் துறவறத்தைத்
     துறந்து மீண்டான்
 


3. அட்ட  திசை- எட்டுத்திக்கு. பட்டம்-காற்றாடி. பிட்டு வர- ‘பிட்டு’
என்னும் சிற்றுண்டி கிடைத்தற் பொருட்டு.
  

4. வன்மம்-பிடிவாதம்.