பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 5

நல்லறமாம் வள்ளுவர்போற் குடிவாழ்க்கை மனைவியுடன்
     நடத்தி நின்றால்
இல்லறமே பெரிதாகும் துறவறமும் பழிப்பின்றேல்
     எழில தாமே.                               5

கற்புடை மங்கையர்

முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடையமங் கையர்மகிமை
     மொழியப் போமோ
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி; வில்வே 
                                டனையெரித்தாள்
     ஒருத்தி; மூவர்
பக்கமுற அமுதளித்தாள் ஒருத்தி;எழு பரிதடுத்தாள்
     ஒருத்தி; பண்டு
கொக்கெனவே நினைந்தனையோ கொங்கணவா
                                  என்றொருத்தி
     கூறி னாளே.                                6

 


5. சௌபரி.  ஒரு  முனிவர். இவர், மீன்களின் வாழ்க்கையைக் கண்டு
இல்லறத்தை  விரும்பி,  மாந்தாதாவின்  பெண்கள்  நூற்றுவரை மணந்து
வாழ்ந்தார்.
  

6. எரி - நெருப்பு.  ஏழுபரி - ஏழு  குதிரை. இவை சூரியன் தேரில்
உள்ளவை.  நெருப்பைக்  குளிரவைத்தவள்.  (அதில் மூழ்கி எழுந்தவள்)
சீதை.  தன்னிடம்  தகாத  முறையில்   பேசிய  வேடனை  எரித்தவள்.
தமயந்தி. பொழுது விடியாமற் செய்தவள்.  நளாயினி.  மும்மூர்த்திகளைக்
குழந்தைகளாக்கிப்  பால்  கொடுத்தவள்.  அத்திரி  முனிவர்   மனைவி
அனுசூயை.   ‘கொக்கென்று   நினைத்தாயோ   கொங்கணவா’   என்று
கொங்கணச் சித்தரைக் கேட்டவள். திருவள்ளுவர் மனைவி வாசுகி.