பக்கம் எண் :

6பழமொழி விளக்கம் என்னும்

நன்மக்கட் பேறு

நன்றிதரும் பிள்ளைஒன்று பெற்றாலும் குலமுழுவதும்
     நன்மை யுண்டாம்
அன்றியறி வில்லாத பிள்ளைஒரு நூறுபெற்றும்
     ஆவ துண்டோ
மன்றில்நடம் புரிவாரே தண்டலையா ரேசொன்னேன்
     வருடந் தோறும்
பன்றிபல ஈன்றுமென்ன குஞ்சரம்ஒன் றீன்றதனாற்
     பயனுண் டாமே.                             7

இறை யன்பு

அல்லமருங் குழலாளை வரகுணபாண் டியராசர்
     அன்பால் ஈந்தார்
கல்லைதனின் மென்றுமிழ்ந்த ஊனமுதைக் கண்ணப்பர்
     கனிவால் ஈந்தார்
சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா வடுவும்ஒரு
     தொண்டர் ஈந்தார்
நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக் கென்றதனை
     நல்கு வாரே.                                8
 


7. மன்று - சபை. குஞ்சாரம் - யானை.
 

8. அல் அமரும் - இருள்தங்கியது போன்ற. குழல்- கூந்தல். கல்லை.
தொன்னை -  வரகுணபாண்டியன் தனக்கு மணம் செய்வித்த பெண்னை
அன்றே   கோயிலில்   உள்ள  சிவபெருமானுக்குக்  கொடுக்க,  அவர்
அப்பெண்ணை    இலிங்கத்தில்    இரண்டறக்    கலக்கச்   செய்தார்.
சிவபெருமானுக்குச்  செந்நெல்  அரிசி  அமுதும்.  கீரையும், மாவடுவும்
கொடுத்தவர் அரிவாட்டாய நாயனார்.