பக்கம் எண் :

தண்டலையார் சதகம் 7

விருந்தோம்பல்

திருவிருந்த தண்டலையர் வளநாட்டில் இல்வாழ்க்கை
     செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தா கிலும்இன்றி உண்டபகல் பகலாமோ
     உறவாய் வந்த
பெருவிருந்துக் குபசாரஞ் செய்தனுப்பி இன்னம்எங்கே
     பெரியோர் என்று
வருவிருந்தோ டுண்பதல்லால் விருந்தில்லா துணுஞ்சோறு
     மருந்து தானே.                              9

இன்சொல் பேசுதல்

பொற்குடையும் பொற்றுகிலும் பொற்பணியுங் 
                                  கொடுப்பதென்ன
     பொருளோ என்று
நற்கமல முகமலர்ந்தே உபசார மிக்கஇன்சொல்
     நடத்தல் நன்றே
கற்கரையும் மொழிபாகர் தண்டலையார் வளநாட்டிற்
     கரும்பின் வேய்ந்த
சற்கரையின் பந்தலிலே தேன்மாரி பொழிந்துவிடுத்
     தன்மை தானே.                             10

நல்லோர்சொற் கேளாமை

குறும்பெண்ணா துயர்ந்தநல்லோர் ஆயிரஞ்சொன் னாலும் 
                                          அதைக்
     குறிக்கொ ளாமல்      
வெறும்பெண்ணா சையிற்சுழல்வேன் மெய்ஞ்ஞானம்  
                                   பொருந்திஉனை
     வேண்டேன் அந்தோ
 


10 துகில் - உடை. வேய்ந்த - மூடிய.