உறும்பெண்ணா ரமுதிடஞ்சேர் தண்டலைநீ ணெறியேஎன் உண்மை தேரில் எறும்பெண்ணா யிரமப்பா கழுதையுங்கை கடந்ததெனும் எண்ணந் தானே. 11 நன்றி மறவாமை துப்பிட்ட ஆலம்விதை சிறிதெனினும் பெரிதாகுந் தோற்றம் போலச் செப்பிட்ட தினையளவு செய்தநன்றி பனையளவாய்ச் சிறந்து தோன்றும் கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார் வளநாட்டிற் கொஞ்ச மேனும் உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும் நினைக்கும்இந்த உலகந் தானே. 12 பயன் இன்மை மேட்டுக்கே விதைத்தவிதை வீணருக்கே செய்தநன்றி மேயும் பட்டி மாட்டுக்கே கொடுத்தவிலை பரத்தையர்க்கே தேடிஇட்ட வண்மை யெல்லாம் |