16. கொச்சை - சீகாழி. அதில் தோன்றிய பிள்ளை. திருஞானசம்பந்தர். கொடி - காக்கை. வச்சிரப் பிள்ளை-வச்சிராயுதத்தை யுடைய இந்திரன் மகன் ; சயந்தன். ‘சயந்தன் காக்கை யுருவங்கொண்டு சென்று சீதையின் தனத்தைக் குத்த, இராமர் புல்லையே அம்பாக ஏவிக் காக்கையின் கண்ணை அழித்து. பின்பு இருகண்களுக்கும் ஒருமணியே இருக்க வரங்கொடுத்தார்’ என்பது வரலாறு. அச்சுதப்பிள்ளை - திருமால் மகன் ; மன்மதன். அந்த ஆண்டவர், தண்டலையார், சிவபெருமான் மன்மதனை எரித்த வரலாறு இதில் குறிக்கப்பட்டது. |