பறித்துரிய பொருள்முழுதுங் கவர்ந்தாலும் அடித்தாலும் பழிசெய் தாலும் பொறுத்தவரே உலகாள்வர் பொங்கினவர் காடாளப் போவர் தாமே. 17 பொறாமை அள்ளித்தண் ணீறணியுந் தண்டலையார் வளநாட்டில் ஆண்மை யுள்ளோர் விள்ளுற்ற கல்வியுள்ளோர் செல்வமுள்ளோர் அழகுடையோர் மேன்மை நோக்கி உள்ளத்தில் அழன்றழன்று நமக்கில்லை எனஉரைத்திங் குழல்வா ரெல்லாம் பிள்ளைப்பெற் றவர்தமைப்பார்த் திருந்துபெரு மூச்செறி யும் பெற்றியோரே. 18 மனக்கோட்டை மண்ணுலகா ளவும் நினைப்பார் பிறர்பொருள்மேல் ஆசைவைப்பார் வலுமை செய்வார் புண்ணியம்என் பதைச்செய்யார் கடைமுறையில் அலக்கழிந்து புரண்டே போவார் பண்ணுலவு மொழிபாகர் தண்டலையார் வகுத்தவிதிப் படியல் லாமல் எண்ணமெல்லாம் பொய்யாகும் மௌனமே மெய்யாகும் இயற்கை தானே. 19 |