பொங்காழி சூழுலகில் உள்ளங்கால் வெள்ளெலும்பாய்ப் போக ஓடி ஐங்காதம் போனாலும் தன்பாவந் தன்னுடனே யாகுந் தானே. 22 அருமை அறியாமை தாயறிவாள் மகளருமை தண்டலைநீ ணெறிநாதர் தாமே தந்தை யாயறிவார் எமதருமை பரவையிடந் தூதுசென்ற தறிந்தி டாரோ பேயறிவார் முழுமூடர் தமிழருமை யறிவாரோ பேசு வாரோ நாயறியா தொருசந்திச் சட்டிபானையின் அந்த நியாயந் தானே. 23 ஈயாதார் வாழ்வு கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின் கனிகள்உப கார மாகும் சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளைஎல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் மட்டுலவுஞ் சடையாரே தண்டலையா ரேசொன்னேன் வனங்கள் தோறும் எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்னுண் டாமே. 24
|