ஆதலின், அவற்றைப் பலவகையில் பேணிக் காத்தனர் முன்னோர். இவ்வகையில் எழுந்ததே, படிக்காசு தம்பிரான் இயற்றிய தண்டலையார் சதகம். | ‘தண்டலை’ என்பது, சோழநாட்டில் உள்ள காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஒன்று. ‘திருத்தண்டலை நீணெறி’ என்பது இதன் முழுப்பெயர். இது, திருத்துறைப்பூண்டி ஸ்டேஷனுக்கு வடக்கில் இரண்டுகல் தொலைவில் உள்ளது. ‘தண்டலைச்சேரி’ என வழங்குகின்றது. இதற்குத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்த ஒரு திருப்பதிகம் உண்டு. இங்குள்ள கோயில், கோச்செங்கட்சோழ நாயனார் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்று. இச்செய்தி, திருப்பதிகத்தின் ஒன்பதாம் திருப்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. | கருவ ருந்தியி னான்முகன் கண்ணனென் றிருவ ருந்தெரி யாவொரு வன்னிடம் செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலை நீணெறி காண்மினே. | இங்குள்ள சிவபெருமான்மீது பாடப் பெற்ற இச் சதக நூல், இனிய எளிய நடையையும், நல்ல ஓசையையும், ஆற்றொழுக்குப்போன்ற பொருளமைதியையும் உடையதாய் விளங்குகின்றது. திருக்குறள், நாலடியார்போன்ற சிறந்த அறநூல்களிலும், மற்றும் பலதுறை நூல்களிலும் உள்ள அரிய கருத்துக்கள் இந்நூலில் எளிமையாகச் சுவைபடச் சொல்லப்படுகின்றன. இவையன்றிச் சைவ சித்தாந்த நுண்பொருள்களும் | ஆங்காங்கு எடுத்துக் கூறப்படுகின்றன. இவற்றால் இந்நூலைச் சிறுவர்கட்குத் தொடக்கக் கல்வி பயிலும் பொழுதே கற்பிக்கும் வழக்கம் முன்னாட்களில் |
|
|
|