இருந்துவந்தது. அவ்வழக்கம் இஞ்ஞான்று இல்லாது போயினமையால், புத்தகம் கிடைப்பதே அரிதாய்விட்டது. இந்நிலையில் இதனைச் சிறு குறிப்புரையுடன் வெளியிடுதல் பலர்க்கும் பயன்படுவதாகும் என்னும் திருவுள்ளத்தால், தருமையாதீனம் 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் பணித்தருளிய அருளாணையின் வண்ணம், பராபவஆண்டு ஆவணிமூல விழா மலராக இந்நூல் வெளிவருகின்றது. |
படிக்காசு தம்பிரான் தருமையாதீனத்து அடியவர் திருக்கூட்டத்துள் ஒருவராதலின், அவரது நூல் இவ்வாதீனத்தின் வெளியீடாக அமைவது மிகமிகப் பொருத்தமே. புள்ளிருக்குவேளூர்ப் புராணத்தில், இவரது புள்ளிருக்குவேளூர்க் கலம்பகத்தையும் உடன் பதிப்பிக்கத் திருவுளம் பற்றியவாறு, இந்நூலையும் தனியாக வெளியிடத் திருவுளம்பற்றிய ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணியவர்களது கருணைத் திறத்திற்கு நாம் பெரிதும் நன்றியறியும் கடப்பாடுடையோம். அறிவையும், அறத்தையும் நல்கும் இந்நூலை அனைவரும் பெற்றுப் பயனடைவார்களாக. |