இறையன்பு மிகுந்தவராகிய இவர் பல தலயாத்திரைகளைச் செய்தார். ஒரு சமையம் தில்லையில் தங்கியிருந்த பொழுது கையிற் பொருள் இன்றிச் சிவகாமி அம்மையைப் பாட, பஞ்சாக்கரப் படியில் ஐந்து பொற்காசுகள் பலரும் பார்க்கும்படி, ‘புலவர்க்கு அம்மை தன் பொற்கொடை’ என்ற வாக்குடன் வீழ்ந்தன. அவற்றைத் தில்லைவாழந்தணர்கள் பொற்றட்டில் வைத்துப் பல சிறப்புக்களுடன் புலவருக்கு அளித்தனர். இக்காரணம் பற்றியே இவருக்கு, ‘படிக்காசு புலவர்’ என்பது பெயராயிற்று. இவரது இளமைப் பெயர் தெரிந்திலது. |