9

தொட்டாலுங் கைமணக்குஞ் சொன்னாலும் வாய் மணக்குந்
       துய்ய சேற்றில்
நட்டாலுந் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினது
       நயப்புத் தானே’’
  

இவர்  பாடிய நூல்கள்,  தொண்டை மண்டல  சதகம்’ தண்டலையார்
சதகம்  சிவந்தெழுந்த  பல்லவன் உலா  பிள்ளைத் தமிழ், பாம்பலங்கார
வருக்கக்  கோவை,  திருச்செங்கோட்டுத்  திருப்பணிமாலை  முதலியன.
அவ்வவ்வமயங்களில் இயற்றிய தனிப்பாடல்கள் பல.
  

வல்லம்காளத்தி பூபதியைப் பாடியது;
  

“பெற்றா ளொருபிள்ளை யென்மனை யாட்டியப்
                                பிள்ளைக்குப்பால்
பற்றாது கஞ்சி குடிக்குந் தரமல்ல பாலிரக்கச்
சிற்றாளு மில்லையிவ் வெல்லா வருத்தமுந் தீரவொரு
கற்றா தரவல்லை யாவல்ல மாநகர்க் காளத்தியே.”
  

“வழிமேல் விழிவைத்து வாடாம லென்மனை யாளுமற்றோர்
பழியாமற் பிள்ளையும் பாலென் றழாமற் பகீரெனுஞ்சொல்
மொழியாம லென்னை வரவிட்ட பாவை முசித்துச்சதை
கழியாம லாவளித் தாய்வல்ல மாநகர்க் காளத்தியே.”

  

மாவண்டூர்க்     கத்தூரி முதலியார் புதல்வர் கறுப்ப முதலியாரைப்
பாடியது;  (இவர்  இம்முனிவர்  பூர்வாச்சிரமத்தில் இயற்றிய தொண்டை
மண்டல  சதகத்தைக்  கேட்டுப்  பெரும்  பொருள்  வழங்கி, இவரைச்
சிவிகையில்    வைத்து    ஊர்வலம்   செய்வித்ததோடு,   சிவிகையும்
தாங்கியவர்).