முகப்பு சொல் தேடல்

'கவுண்டர்' என்ற சொல் உள்ள பக்கம்
92

இட்டு வழங்கி வருகிறார்கள். இன்னும் சில கொங்கு நாட்டுச்
சமஸ்தானங்களிலு மிருந்திருக்கிறது. பழைய காலத்துப் பட்டப்
பெயராதலின் இதனைச் சற்று விசாரித்தல் வேண்டும்.

     சாலிசகம் 726. கி.பி. 803 - 4 ராஷ்ட்ர கூடராஜா 3 - வது
கோவிந்தப்பனுடைய பெஞ்சாதி பெயர் காமுண்டபே.

                                      (Gamundabbai.)

     அநந்தபூர் ஜில்லா இந்துப்பூர் தாலூகா மானிப்பல்லியில் நுளம்ப
பல்லவ ராஜா ஜயதேவன் காலத்து சாசனம் ஸ்ரீ புருஷய்யர் மகன்
கோரப்பனும் காமுண்டர்களும், பிராமணர்களும் சேர்ந்து, பெத்து
கொண்டே என்ற ஊரில் சூரிய தேவனுக்கு தானம் செய்துள்ளார்கள்.
(No. 901 - 1913)

     பல்லாரி - சஞ்சீவிராயன் கோட்டை - கதம்பகாமரசனும்
காமுண்டர்களும் இருந்து தானம் செய்தார்கள்.

     சித்தூர் ஜில்லா கர்ஷன பல்லி என்ற ஊரில் - முத்துக்கூர்
கிராமத்தில் - இறந்த வீரனுடைய மகனுக்கு, காமுண்டர்கள் தானம்
செய்தார்கள் (No. 331 - 1912)

     எனக் கன்னட தேசத்தும், தெலுங்கு தேசத்தும் காமுண்டன்
என்னும் இப்பெயர் கொண்ட, அரசர் அதிகாரிகள் விளங்கினார்கள்
எனத் தெரிகின்றது.

     இதனை உற்று நோக்குங்கால் ராஷ்டரகூட அரசர்கள்,
நுளம்ப பல்லவ வேந்தர்கள், ஆட்சியில் நாடு அல்லது ஊர் அதிகாரம்
பெற்றவர். காமுண்டன் எனச் சொல்லப்பட்டார். அதற்கு முன்னும்
இருந்திருக்கலாமோ தெரியவில்லை. இப்பெயர் கன்னட தேசத்து
அதிகமிருக்கிறது. அவ்வரசர்கள் இத் தென்னாட்டும் புகுந்து
ஆண்டிருக்கிறார்கள். அக்காலத்து இப்பெயர் இந்நாட்டில் வந்து
காமிண்டன் என்று திரிந்தது போலும் - காமுண்ட - காமிண்ட
என்னும் பெயர், கிராமப் பெரிய தனக்காரர்கள் பெற்று நாளடைவே
காவண்ட - காவுண்ட என்று, பின் கவண்ட - கவுண்ட என்று மருவிற்று
என்பது சாசன பரிசோதகர்கள் கருத்து. இது போலவே கன்னட
தேசத்தார் கவுடு என்று வழங்குகிறார்கள் - கவுண்டிக்கை என்பது
ஊர்ப்பெரிய தனத்தைக் குறித்ததாக வழக்கத்திலிருக்கிறது. நாட்டுக்
கவுண்டன் - ஊர்க் கவுண்டன் என்பதாலறியலாம். முதன்மையாளர்
கொள்ளும் பெயரை அவர்கள் சுற்றத்தவர்களும் பாராட்டலாயினர்.
இக்கொங்கு நாட்டுப் புறங்களில் அங்கங்கு ஊர் முதன்மை
பெற்றுள்ளவர்களான வேளாளர், வேட்டுவர் - படையாட்சி முதலிய
வகுப்பினருள்ளுங் கவுண்டர் என்று வழங்கி வருதல் காண்கிறோம்.