தொடக்கம் |
51 முதல் 60 வரை
|
|
|
51. | அரணம் பொருள்என்று அருள்ஒன் | | றிலாத அசுரர்தங்கள் முரண்அன்(று) அழிய முனிந்தபெம் மானும் முகுந்தனுமே சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார் மரணம் பிறவி இரண்டும்எய் தார்இந்த வையகத்தே. |
|
|
|
|
|
|
|
52. | வையம் துரகம் மதகரி | | மாமகு டம்சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்(கு) அன்புமுன்பு செய்யும் தவம்உடை யார்க்குள வாகிய சின்னங்களே. |
|
|
|
|
|
|
|
53. | சின்னஞ் சிறிய மருங்கினில் | | சாத்திய செய்யபட்டும் பென்னம் பெரிய முலையும்முத் தாரமும் பிச்சிமொய்த்த கன்னங் கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனியிருப் பார்க்கிது போலும் தவமில்லையே. |
|
|
|
|
|
|
|
54. | இல்லாமை சொல்லி ஒருவர்தம் | | பால்சென்(று) இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவி ரேல்நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம் பால்ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. |
|
|
|
|
|
|
|
55. | மின்னா யிரம்ஒரு மெய்வடி | | வாகி விளங்குகின்ற தன்னாள் அகமகிழ் ஆனந்த வல்லி அருமறைக்கு முன்னாய் நடுவெங்கு மாய்முடி வாய முதல்விதன்னை உன்னா(து) ஒழியினும் உன்னினும் வேண்டுவ(து) ஒன்றிலையே. |
|
|
|
|
|
|
|
56. | ஒன்றாய் அரும்பிப் பலவாய் | | விரிந்(து)இவ் வுலகெங்குமாய் நின்றாள் அனைத்தையும் நீங்கிநிற் பாள் என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்ற வாஇப் பொருள்அறிவார் அன்றா லிலையில் துயின்றபெம் மானும்என் ஐயனுமே. |
|
|
|
|
|
|
|
57. | ஐயன் அளந்த படியிரு¥ | | நாழிகொண்(டு) அண்டம்எல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலை யுங்கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத் தாய்இது வோஉன்றன் மெய்யருளே. |
|
|
|
|
|
|
|
58. | அருணாம் புயத்தும்என் சித்தாம் | | புயத்தும் அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல்நல் லாள்தகை சேர்நயனக் கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும் சரணாம் புயமும்அல் லாற்கண்டி லேன்ஒரு தஞ்சமுமே. |
|
|
|
|
|
|
|
59. | தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல | | தென்றுன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும் அஞ்சம்பும் இக்(கு)அலர் ஆகநின் றாய் அறியார்எனினும் பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே. |
|
|
|
|
|
|
|
60. | பாலினும் சொல்இனி யாய்பனி | | மாமலர்ப் பாதம்வைக்க மாலினும் தேவர் வணங்கநின் றோன்கொன்றை வார்சடையின் மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும் சாலநன் றோஅடி யேன்முடை நாய்த்தலையே. |
|
|
|
|
|
|