தொடக்கம் |
91 முதல் 100 வரை
|
|
|
91. | மெல்லிய நுண்ணிடை மின்அனை | | யாளை விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழ்ந்துமறை சொல்லிய வண்ணம் தொழும்அடி யாரைத் தொழுமவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு) ஊரும் பதம்தருமே. |
|
|
|
|
|
|
|
92. | பதத்தே உருகிநின் பாதத்தி | | லேமனம் பற்றிஉன்றன் இதத்தே ஒழுக அடிமைகொண் டாய்இனி யான்ஒருவர் மதத்தே மதியங் கேன்அவர் போனவழியும் செல்லேன் முதத்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே. |
|
|
|
|
|
|
|
93. | நகையே இஃதிந்த ஞாலமெல் | | லாம்பெற்ற நாயகிக்கு முகையே முகிழ்முலை மானே முதுகண் முடிவில்அந்த வகையே பிறவியும் வம்பே மலைகள் என்பதுநாம் மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. |
|
|
|
|
|
|
|
94. | விரும்பித் தொழும்அடி யார்விழி | | நீர்மல்கி மெய்புளகம் அரும்பித் ததும்பிய ஆனந்த மாகி அறிவிழந்து சுரும்பிற் களித்து மொழிதடு மாறிமுன் சொன்னஎல்லாம் தரும்பித்தர் ஆவரென் றால்அபி ராமி சமயம்நன்றே |
|
|
|
|
|
|
|
95. | நன்றே வருகினும் தீதே | | விளைகினும் நான்அறிவ(து) ஒன்றேயு மில்லைஉனக்கே பரம்எனக்(கு) உள்ளஎல்லாம் அன்றே உனதென்(று) அளித்துவிட் டேன்அழி யாதகுணக் குன்றே அருட்கட லேஇம வான்பெற்ற கோமளமே. |
|
|
|
|
|
|
|
96. | கோமள வல்லியை அல்லியந் | | தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை ஏதம் இலாளை எழுதரிய சாமள மேனிச் சகலக லாமயில் தன்னைத்தம்மால் ஆமள வும்தொழு வார்எழு பாருக்கும் அதிபரே. |
|
|
|
|
|
|
|
97. | ஆதித்தன் அம்புலி அங்கி | | குபேரன் அமரர்தங்கோன் போதிற் பிரமன்(புராரி) முராரி பொதிமுனி காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல் சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே. |
|
|
|
|
|
|
|
98. | தைவந்து நின்னடித் தாமரை | | சூடிய சங்கரற்குக் கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததெங்கே மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு காலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகஅறி யாமடப் பூங்குயிலே. |
|
|
|
|
|
|
|
99. | குயிலாய் இருக்கும் கடம்பா | | டவியிடைக் கோலஇயல் மயிலாய் இருக்கும் இமயா சலத்திடை வந்துதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீதன்னமாம் கயிலா யாருக்(கு)அன்(று) இமவான் அளித்த கனங்குழையே. |
|
|
|
|
|
|
|
100. | குழையைத் தழுவிய கொன்றையந் | | தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திருநெடுந் தோளும் கருப்புவில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொருக்கண்ணும் நெஞ்சில்எப் போதும் உதிக்கின்றவே. |
|
|
|
|
|
|
|
கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு | தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்த னேஉல(கு) ஏழும்பெற்ற சீரபி ராமிஅந் தாதிஎப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே. |
|
|
|
|
|
|
|
|
| ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம்எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவிஅடங்கக் காத்தாளை ஐங்கணை பாசாங் குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு வார்க்(கு)ஒரு தீங்கில்லையே. |
|
|
|
|
|
|
|