தஞ்சைவாணன் கோவை
100

 
      (இ-ள்.) மெய்த்திருத்தத்தினும்   வெற்றியினும்   மதனைப்   போல்வீர்.
தஞ்சைவாணனது முகில்  நிறையும் உச்சியையுடைய சிறுமலையிடத்துத் திரிந்தது
போலிருக்கின்ற   கொம்பையுடைய  கையையும்,  யானைகட்குத்  தலைமையாகிய
குஞ்சரமும் குருதி யொழுகக், கொடிச்சியராகிய யாங்கன் காக்கும் புனப்பக்கத்தே
தனியேவரக் கண்டிலேனம் என்றவாறு.

வாக்கு - திருத்தம்;  மெய்  அவாய்நிலையான்  வந்தது. 1`வாக்கணங்  கார்மணி
வீணைவல் லாற்கு` என்னும் கேமசரியாரிலம் பகத்துப் பாட்டில் `வாக்கு` திருத்த
மென்பதுணர்க.   திறன் - வெற்றி.    மஞ்சு - மேகம்.   தேக்கும் - நிறையும்.
குடுமி - உச்சி.  சிறுமலை - மலைப்பெயர்.  `சிறுமலைக்கு` என்புழி  வேற்றுமை
மயக்கம்.    திரிதல் - முறுக்குதல்.   கோடு - கொம்பு.   இரலை - கலைமான்.
குஞ்சரம்  -   யானை.   குருதி   -   இரத்தம்.   சோர்தல்   -   ஒழுகுதல்.
கொடிச்சியர் - குறத்தியர். இரலைக்கு உம்மை கொடாது குஞ்சரத்திற்கு  உம்மை
கொடுத்தது என்னை யெனின்,

  2வாக்குந் திறனு மதனையொப் பீர்தஞ்சை வாணன்மஞ்சு
தேக்குங் குடுமிச் சிறுமலைக் கேதிரி கோட்டிரலை
கோக்குஞ் சரமுங் குருதியுஞ் சோரக் கொடிச்சியரேம்
காக்கும் புனமருங் கேதனி யேவரக் கண்டிலமே.

என்னும் விதியாற் கொள்க. குருதியும் என்னும் உம்மை அசை.
(78)    
இறைவனை நகுதல்:
இறைவனை  நகுதல்  என்பது,   தலைவன் அப்பாற்   சென்றானாகப்  பாங்கி
தலைவியை நோக்கி அசதியாடி நகரநிற்றல்.

  மைவா னிலங்குகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பில்
இவ்வாளி மொய்ம்பரின் றெய்தமெய்ம் மானிள மாந்தளிரின்
செவ்வாளி யுங்கொண்டு சேட்சென்ற தாலன்று சீதைகொண்கன்
கைவாளி யுங்கொண்டு போனபொய்ம் மானினுங் கள்ளத்ததே.

(இ-ள்.) தஞ்சைவாணன்  வெற்பிடத்து    மையெழுதிய  வாள்போ   விலங்குங்
கண்ணையுடைய   மங்கைப்   பருவத்து    நல்லாய்!  இந்த  ஆளி   போலும்
வலியையுடையார் இப்போது எய்த மெய்யாகிய மான் இளமாந்தளிராகிய  சிவந்த
வாளியையுங் கொண்டு சேய்மைக்கண் சென்றதாதலால், பண்டைநாளில் இராமனது
வாளியையுங் கொண்டு போன பொய்யாகிய மானினுங் கள்ளத்தையுடையது
என்றவாறு.


1. சிந்தா. கேமசரியார் - 62.
2. தொல். சொல். இடையியல் - 36.