கட
தஞ்சைவாணன் கோவை
108

 
பாங்கி குலமுறை கிளைத்தல்:
     போது   தலைவியாகவும்,   தேன்   இன்பமாகவும்   வண்டு   தானாகவும்
உவமித்தவதனான் தலைவியின்பத்து மூழ்கும் என்று வருவிக்கப்பட்டது.

வனைதல் - செய்தல்.       புனைதல் - அலங்கரித்தல்.       அயல் - பக்கம்.
நண்ணல் - பொருந்தல். அணங்கு - தெய்வப்பெண். `நினையா விடிலுயிர் நில்லாது`
என்பது  அவாய்  நிலையான் வந்தது.  `போதகத்தேன்  வண்டு`  எனவும்,  `என்
நல்வினை தான் வனைந் தாலன கொங்கை மாதுருவாய்` எனவும் மாறுக.
(87)    
பாங்கி நின்குறை நீயே சென்றுரையென்றல்:
மருப்பா வியதொங்கல் வாணன்தென் மாறை வனசமலர்த்
திருப்பாவை யன்னவென் சேயிழை யாட்குன் திருவுளத்து
விருப்பா கியகுறை யுள்ளதெல் லாஞ்சொல்லி வேண்டுகதி
பொருப்பா மொழியப் பெறாரெம்ம னோரிவை போல்வனவே.

     (இ-ள்.) குறிஞ்சிநிலத்து  இறைவனே!  மணம் பொருந்திய மாலையையுடைய
வாணனது தென்மாறை நாட்டுத்  தாமரைமலரில்  எழுந்தருளியிருக்குந்  திருமாது
போன்ற     எம்பெருமாட்டிக்கு     உனது     திருவுளத்து     விருப்பமாகிய
குறையுள்ளதெல்லாம்  
 நீயே   சொல்லி   வேண்டிக்    கொள்வாயாக;   அன்றி
எம்போல்வார்  இவைபோன்ற  காரியங்கள்  மொழியப்பெறுந் தகுதியர்   அல்லர்
என்றவாறு.


     மரு - மணம். பாவுதல் - பொருந்துதல். தொங்கல் - மாலை.
வனசமலர் - தாமரைமலர். திருப்பாவை - திருமாது. பொருப்பன் - குறிஞ்சிநிலத்து
இறைவன்.
 (88)    
பாங்கியைத் தலைவன் பழித்தல்:
  வில்லார் நுதல்வெய்ய வேலார் விரிக்கென் மெலிவுசொல்ல
வல்லா ரிலைசொல்ல வல்லையென் றியான்தஞ்சை வாணன்றெவ்வின்
ஒல்லா திதுநுமக் கென்றுண ரேனின் றுணங்கியிந்நாள்
எல்லா மிரந்தது நின்குறை யேயல்ல என்குறையே.

     (இ-ள்.) வில்போன்ற நுதலும்,  வெவ்விய வேல் போன்ற  விழியுமுடையாட்கு
எனது மெலிவுசொல்ல,   நின்னை யல்லால் வல்லாரில்லை;   நீ சொல்ல வல்லை
யென்றெண்ணி யான் தஞ்சைவாணனுக்குப் பகைவர் செய்தியார்க்கும் பொருந்தாது
போல, என் செய்தி நுமக்குப் பொருந்தாதென்ற அறியேன்; வேட்கை வெயிலினால்
உலர்ந்து, செஞ்சுடர் தோன்றுங் காலையில் தொடங்கி இன்றாகிய இந்நாள் முற்றும்
நும்மை யிரந்தது நின்மேற்குறையல்ல, என்மேற் குறை என்றவாறு.