|
|
`வளர் காவி செறி வயல்` என மாறுக. காவி - நீலம். நெறி - ஒழுங்கு. குறி - கூடுமிடம். கறி - மிளகு: ஆகுபெயர். சாரல். மலைப்பக்கம். |
(92) |
தன்னிலை தலைவன் சாற்றல்: |
தன்னிலை தலைவன் சாற்றல் என்பது, இவ்வாறு கூறக் கேட்ட தலைவன் வேட்கை நோயால் உழக்குந்தன்மை கூறல்.
|
| உரைத்தென் பிறவந்தப் பைந்தொடி யாக முறாவிடில்வெண் திரைத்தென் கடன்முத்துந் தென்மலைச் சந்துஞ் செழும்பனிநீர் அரைத்தென் புருகமெய் அப்பினும் வெப்ப மறாதினிநின் வரைத்தென் கருமமெல் லாந்தஞ்சை வாணன் வரையணங்கே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் மலையிலிருக்கும் அணங்கே! அந்தப் பைந்ததொடியை யுடையாளது ஆகத்தைக் கூடாவிடில் யான் சொல்லி யென்ன பயன்? வெண்மை நிறம் பொருந்திய திரை பொருந்தும் தென்கடலிடைப் பிறந்த முத்தும், பொதியமலையிற் பிறந்த சந்தனமும் செழும்பனிநீர் விட்டரைத்து வேட்கைத்தீயில் வெதும்பிய எலும்பு உருக என் மேனியெங்கும் அப்பினாலும் வெப்பம் ஆறாது; இன்று எனது காரியமெல்லாம் நினது எண்ணத்தின் மட்டிற்பட்டது என்றவாறு. |
எனவே, உய்யச் செய்யினும் நையச் செய்யினும் நீயல்லால் வேறில்லை யென்றவாறாயிற்று. பிற : அசைநிலை. பைந்தொடி : அன்மொழித்தொகை. ஆகம் - மெய். திரை - அலை. தென்மலை - பொதியம். சந்து - சந்தனம். ஆறாது : அறாது எனக் குறுக்கும் வழிக் குறுக்கலாய் நின்றது, வாராது - வராது. தாராது - தராது என்றாற்போல. |
(93) |
பாங்கி உலகிய லுரைத்தல்: |
பாங்கி உலகியல் உரைத்தல் என்பது, இவ்வாறு கூறக் கேட்ட பாங்கி உலகில் வேட்கைகொண்டோர் சான்றோரை முன்னிட்டு வரைந்து கொள்வர். அவ்வாறு உலகியலால் நீயும் வரைந்து கொள்க எனக் கூறல். |
| விரையக நாண்மலர் மெல்லியல் மாதை விரும்பினையேல் வரையக நாட வரைந்துகொ ணீதஞ்சை வாணன்முந்நீர்த் தரையக நான்மறைக் கேள்வியர் வேள்வியர் சான்றவர்தம் உரையக நாடிமுன் னிட்டன தாகு முலகியலே.
|
(இ-ள்.) மலையிடமாகிய நாட்டை யுடையவனே! தஞ்சைவாணனது முந்நீர் சூழ்ந்த புவியகத்தில் வேட்கை கொண்டார் செய்யும் உலகமுறைமை. நான்கு மறையையும் கேள்வியாலறிந்து வேள்வி செய்யுஞ் சான்றவர் கூறும் |