|
|
உரையிடத்துக் கொண்ட பொருளைக் கருதி அவரை முன்னிட்டு வரைந்து கொள்ளில், அன்னதாகுமாதலால், மணத்தைத் தன்னிடத்திலேயுடைய நாண்மலரிலிருக்கும் மெல்லிய இயல்பினையுடைய மாதுபோல்வாளை விரும்பினையேல், நீ வரைந்து கொள்வாயாக என்றவாறு.
|
விரை - மணம். நாண்மலர் - முறுக்கவிழ்மலர். மாது; ஆகுபெயர். வரைதல் - மணஞ்செய்தல். உரையகம்: ஆகுபெயர். கேள்வியர்: முற்றெச்சம். அன்று: இடைக்குறைவிகாரம். |
(94) |
தலைமகன் மறுத்தல்: |
| வெண்டா மரைமங்கை காதல னாகிய வேதியன்பால் உண்டா கியதொல் லுலகிய லாலுங்க ளாரணங்கை வண்டார் குழலி வரைந்துகொள் வேன்தஞ்சை வாணன்வண்மை கண்டா லருளள்ள நீயென தாருயிர் காத்தபின்னே.
|
(இ-ள்.) வண்டார்ந்த குழலையுடையாய்! தஞ்சைவாணனது கொடை கண்டாற்போலும் அருளுள்ள நீயாதலால், இப்போது என்னுடைய அரியவுயிர் ஏகுந் தன்மையாய் நின்றது, அஃது ஏகாமற் காத்தபின் வெண்டாமரை மங்கைக்குக் கணவனாகிய மறையோனிடத்து உண்டாகிப் பழைமையாகிய வுலகியலால் உங்களுடைய ஆரணங்கு போல்வாளை நீ சொன்னபடி வரைந்து கொள்வேன் என்றவாறு.
|
வெண்டாமரை மங்கை - வாணி. வேதியன் - பிரமன். ஆரணங்கு: ஆகுபெயர். நல்குரவால் உயிர்போகின்றாரைப் போகாமல் நிலைமையைச் செய்யுங் கொடையாதலால், அக்கொடையைக் கண்டாற்போலும் அருளுள்ள நீ யெனவே, கொடைக்கும் அவளருளுக்கும் உவமை கூறியவாற்றான், `எனது ஆருயிர் காத்தபின்` என்று கூறியவாறு உணர்க. வண்மை - கொடை. |
(95) |
பாங்கியஞ்சி யச்சுறுத்தல்: |
பாங்கி அஞ்சி அச்சுறுத்தல் என்பத, பாங்கி தானும் அஞ்சினவளாய்த் தலைவனை அப்புனம்விட்டுப் போக அச்சமுறுத்திக் கூறல்.
|
| மல்லார் புயன்தஞ்சை வாணனவெற் பாவெமர் வந்தினியிக் கல்லார் வியன்புனங் காவல்வி டாரவர் காணின்மிகப் பொல்லா திரண்டது போதுமற் றியாங்களும் போதுமிங்கு நில்லா தெழுந்தருள் நீயுமிப்போது நெடுந்தகையே.
|