கட
113
பாங்கியிற் கூட்டம்

 
      (இ-ள்.) மற்றொழில்   பொருந்திய    புயத்தையுடைய   தஞ்சை  வாணன்
வெற்பிடத்துள்ளனே!  எங்கட்குத் தமராயுள்ளவர்  இன்றுவந்து  மலையார்ந்தகன்ற
புனம் இராக்காவல் விடார்; அவர் நின்னைக் காணில் மிகவும் பொல்லாராயிருப்பர்;
நெடுந்தகையை யுடையவனே! இருண்டது போது,  எம்மூர்க்கு யாங்களும் போதும்,
நீயும் இப்போது இங்கு நில்லாது எழுந்தருள்வாயாக என்றவாறு.

எமர் - எமக்குத் தமர்.  பியன் - அகற்சி.   நெடுந்தகை : அன்மொழித் தொகை.
இதனுள், `வெற்பா` எனவும், `நெடுந்தகை` எனவும் இரண்டிடத்தும்  பொருட்பெயர்
முன்னிலையாய் நின்றது. இவ்வாறு வந்தது என்னையெனின்,

  1`பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொள்வேறு படாஅ தொன்றா கும்மே`

என்னுஞ் சூத்திரவிதியால்.

  2`பொற்பூண் சுமந்த புணர்மென்முலைக் கோடு போழ
நற்பூங் கழலா னிருதிங்க னயந்த வாறுங்
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான்
வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்டவாறும்.`

இதனுள், `நற்பூங்கழலான்` எனவும், `கற்பாடழித்த கனமாமணித் துண்செய்தோளான்`
எனவும் இரண்டிடத்தும் படர்க்கைப் பெயர் ஒரு பொருளைக் கருதியவாறு உணர்க.

`வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந்
தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற்
கூடலார் கோவொடு நீயும் படுதியே
நாடறியக் கவ்வை யொருங்கு

என்பதனானும் உணர்க.

தலைவன் கையுறை புகழ்தல்:
  சிமையார் மலயத் தமிழ்த்தஞ்சை வாணன் சிறுமலைமேல்
அமையா கியதடந் தோளன்ன மேயணி யத்தகுமால்
உமையாள் இறைவன் பயில்கயி லாயத்தும் உம்பர்தங்கும்
இமையா சலத்துமெல் லாமில்லை யால் நிகர் இத்தழைக்கே.


1. தொல். சொல். கிளவியாக்கம் - 37. 2. சிந்தா. பதிகம் - 14.