|
|
(இ-ள்.) சிகரத்தைப் பொருந்திய பொதியமலையிற் பிறந்த தமிழ் வளர்க்குந் தஞ்சைவாணனது சிறுமலைமேலிருக்கும் மூங்கிலிற் பெரிய தோளையுடைய அன்னம்போல்வாய், இத் தழைக்கு நிகர் உமையாள் இறைவனாகிய சிவன் பிரியாது பழகி யிருக்குங் கயிலாயத்தும், தேவர்கள் பிரியாதிருக்கும் இமையா சலத்தும் முற்றுமில்லை யாதலால் அணியத்தகும் என்றவாறு. |
சிமையம் - சிமையென விகாரப்பட்டு நின்றது. மலயம் - பொதிய மலை. அமை - மூங்கில். தடந்தோள் - பெரிய தோள். அன்னம்: ஆகுபெயர். நிகர் - ஒப்பு. `தடந்தோளாகிய` என மாறுக. ஆல்: அசை. இத்தழைக்கு நிகரில்லை யென்று கூறுவது என்னையெனின் தன் உயிரை நிறுத்தற்கு ஏதுவாகலானும், மணத்திற்குத் தான் முன்னிற்றலானும் என்றுணர்க. |
(97) |
பாங்கி கையுறை மறுத்தல்: |
| மல்குற்ற தண்புனல் சூழ்தஞ்சை வாணன் மலயவெற்பா நல்குற் றவையிந்த நாட்டுள வன்மையி னன்னுதலான் அல்குற் றடத்தெமர் கண்டால் அயிர்ப்பர் அதுவுமன்றிப் பல்குற் றமும்வரு மால்யாங்கள் வாங்கேம் பசுந்தழையே.
|
(இ-ள்.) நிறையுற்ற தண்புனல் சூழ்ந்த தஞ்சைவாணன் மலய வெற்பி லிருப்பவனே! நீ தரப்பட்ட இத்தழை இந்நாட்டிலுள்ளன அல்லாமையால் நன்னுதலாள் அல்குற்றடத்திலே யணியில் எமக்குத் தமராயுள்ளார் கண்டால் ஐயப்படுவர்; அதுவுமன்றிப் பல குற்றமும் வருமாதலால், இப்பசுந்தழையை யாங்கள் வாங்குதல் செய்யேம் என்றவாறு. |
மல்குறள் - நிறைதல். நல்குறல் - தருதல். அயிர்த்தல் - ஐயப்படுதல். குலத்துக்கும் தலைவிக்கும் தனக்கும் மறு என்பது பற்றிப் பல குற்றம் என்று கூறினாள். |
(98) |
ஆற்றா நெஞ்சினோ டவன் புலத்தல்: |
ஆற்றா நெஞ்சினொடு அவன் புலத்தல் என்பது, ஆற்றாமையாகிய நெஞ்சுடனே தலைவன் புலந்து கூறியது.
|
| உலழயும்வெங் காளமும் போலுங்கண் ணாளொரு காலமுள்ளம் குழையுமெம் பாலென்று கொண்டதெஞ் சேகலிக் கோடைமண்மேல் மழையுமந் தாரமும் வந்தன வாணன்தென் மாறையின்மாத் தழையுநம் போலிங்ங னேகவின் வாடத் தவஞ்செய்ததே.
|