கட
தஞ்சைவாணன் கோவை
117

 
     சேய் - முருகன். தோய்தல் - தொடுதல். தாரை - கண்மணி;   `பெருவேல்`
என  மாறுக.   வேல்விழி:   அன்மொழித்தொகை.    காமத்தைப்   பிணியாகக்
கூறப்பட்டமையின் மடலேறுதலை மருந்தாகக் கூறப்பட்டது.

(101)    
திருந்தார் தொழுங்கழற் சேயன்ன வாணன்தென் மாறைவெற்பில்
அருந்தா அமுதன்ன அஞ்சொனல் லாரழ கார்கழைநோய்
பெருந்தாரை வேல்விழி தந்தவெங் காமப் பிணிதனக்கு
மருந்தா வதுநெஞ்ச மேயில்லை வேறு மடலன்றியே.

பாங்கிக் குலகியன்மேல் வைத்துரைத்தல்:
    பாங்கிக்கு  உலகியன்மேல்  வைத்து  உரைத்தல்  என்பது,  தலைவன்  அம்
மடலேற்றினை உலகின்மேல் வைத்துப் பாங்கிக்குக் கூறுதல்.


விரையூர் குழலியர் தந்தசிந் தாகுல வெள்ளநிறைக்
கரையூர் பொழுதிளங் காளையர் தாங்கிழி கைப்பிடித்துத்
தரையூர் தொறும்பெண்ணை மாமட லூர்வர் தவிர்ந்துயின்னும்
வரையூர்வர் தஞ்சையர் கோன்வாணன் மாறையில் வாணுதலே.

    (இ-ள்.) தஞ்சையி  லுள்ளோர்க்கு   இறைவனாகிய   வாணன்   தென்மாறை
நாட்டிலிருக்கும்    ஒளிபொருந்திய    நுதலினை   யுடையவனே!    மணமூருங்
குழலையுடைய மாதர் தந்த காதலாகிய  வெள்ளமானது நிறையாகிய கரையின்மேற
்செல்லும்போது, இளங்காளையர்  தாம்  வரைந்த  கிழியைக்  கையிலே  பிடித்துப்
புவியின்கணுளதாகிய ஊர்கடோறும்  பனை  மடலினாற் செய்த மாவை நடத்துவர்; அதனாற்  சிந்தனை  முடியாவிடில்,  அதனை  விடுத்துப்  பின்னும்  வரை பாயச்
செல்வர்; இதனை நீ அறிவாயாக என்றவாறு.

    விரை - மணம்.     உர்தல் - நாற்றிக்குஞ்         சென்று      கமழ்தல்.
கரையூர்தல் - கரைமேற்செல்லுதல்.     கிழி - தலைவி    யுரு   எழுதப்பட்டது.
பெண்ணை - பனை. `மடல் மா` என மாறுக. வரையூர்தல் - வரைபாய நடத்தல்.
(102)    
அம் மடலேற்றினைத் தலைவன் தன்மேல்வைத்துச் சாற்றல்:
    அம்  மடலேற்றினைத்  தலைவன்  தன்மேல்  வைத்துச்  சாற்றல்   என்பது,
அம்மடலேற்றினைத் தலைவன் தன்மேல் வைத்துக் கூறல்.

  வன்பணி போனிலந் தாங்கிய வாணன்தென் மாறைவெற்பில்
மின்பணி பூண்முலை மெல்லிய லீர்குறை வேண்டியுங்கள்
முன்பணி வேனின்று நாளைவெண் பூளை முகிழெருக்கோ
டென்பணி வேன்மடல் மேல்வரு வேனிவை யென்பணியே.

    (இ-ள்.) வலிய  அநந்தனைப்போல்   நிலவுலகத்தைத்   தாங்கிய   வாணன்
தென்மாறை    வெற்பில்    மின்னும்   பணியும்  ஒளிப்   புண்    பொருந்திய
முலையினையுடைய   மெல்லியலீர்!  எனது  குறையை  முடிக்கவேண்டி   யின்று
உங்கள் முன் பணிவேன்; யான் பணிதலைக் கண்டு என் குறையை