கட
118
பாங்கியிற் கூட்டம்

 
      முடியாவிடில்,  நாளை  வெண்பூளைப்பூ  எருக்கமுகையுடனே என்புமாலை
அணிந்து மடனமா ஏறி வருவேன்; என்னுடைய தொழில் இவை என்றவாறு.

      `முடியாவிடில்` என்பது அவாய்நிலையான் வந்தது.  வன்பணி - அநந்தன்.
`எருக்க முகிழ்` என மாறுக. அணிவேன் : முற்றுச் சொல் எச்சமாய் நின்றது.
பணி - தொழில்.

      இவ்வாறு  மடலேறுவேன்  என்று  கூறியது  பெருந்திணைப்   பாற்படுமே
யெனின், படாது. என்னை, தலைவன் பாங்கி  உடன்படவேண்டுமென்று  குறித்துச்
சொல்லியதல்லது  மடலேறுங்  கருத்தாய்க்  கூறினன்  அல்லன்.  ஆதலானன்றே
படலேற்றென     வையாது      மடற்கூற்றென்று      கூறியது;     சான்றோர்
செய்யுட்களிலெல்லாம்,    மடற்கூற்றென்றே     வருவதல்லது     மடலேற்றென
வாராமையானும்,  1`மடன்மா  கூறுமிடனுமா  ருண்டே`  என்று   தொல்காப்பியர் கூறியவாற்றானும் உணர்க.
(103)    
பாங்கி தலைமகள் அவயவத் தருமை சாற்றல்:
      பாங்கி  தலைமகள்  அவயவத்   தருமை   சாற்றல்   என்பது, அவ்வாறு
கூறக்கேட்டபாங்கி  கிழி  தீட்டிய  பின்னன்றோ மடலேறுவது, ஆதலால் தலைவி
யவயவம் தீட்டுதற்கு அருமையென்று கூறல்.

  தொடையே யெருக்கென்பு நீயணிந் தாலென்னை சூல்வளையூர்
மடையேய் வயற்றஞ்சை வாணன்வெற் பாமல ரோன்வகுத்த
படையே நயனம் படைத்தபொற் பாவை படியெடுக்க
இடையே தெனத்தெரி யாதுரை யாணி யிடவரிதே.

     (இ-ள்.) சூல்கொண்ட  சங்குகள்  ஊரும்  மடை  பொருந்திய  வயல்சூழ்ந்த
தஞ்சைவாணன் வெற்பனே!  மாலையாக எருக்கையும்  என்பையும் நீ  யணிந்தால்
நினக்கியாது பயனைத் தரும்?  கிழி தீட்டிய பின்னன்றோ மடலேறுவது,  தீட்டுதல்
நின்னால் முடியாது; எங்ஙனமெனின், பிரமன்  வகுத்த  படைக்கலமே  நயனமாகப்
படைத்த பொற்பாவையது உருப்படியெடுக்க இடையாதெனின் தெரியாது; சொல்லை
யெழுது கருவியால எழுதவரிது.

      இதனுள்,  `பொற்பாவை` என்பது,  பொன்னம்பாவையாக்கிப் படிக்கல்லிட்டு
நிறுக்க  நிறையெதேனத்   தெரியாது,  உரைக்க  எண்ணின்  உரையாணிடவரிது;
இவ்வாறு வேறு பொருடோன்றிச் சிலேடையாய் நின்றது காண்க.


1. தொல். பொருள். களவியல் - 11.